இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா – ஷிகார் தவான் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்தது. இருவரும் அரைசதம் அடித்தனர். கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது.
பின்னர், ரோகித் சர்மா உடன் கேப்டன் விராட் கோலி இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 85 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும்.
இந்த உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மாவின் இரண்டாவது சதம் இது. தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் சதம் அடித்து இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை தொடர்களில் சதம் விளாசிய இரண்டாவது வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த உலகக் கோப்பை தொடரில் முதல் வீரராக விராட் கோலி சதம் அடித்து இருந்தார். ஒருநாள் போட்டிகளில் அவரது 24வது சதம்.
இந்தப் போட்டியில் ரோகித் சர்மா இரண்டு ரன் அவுட்களில் இருந்து தப்பினார். அதனை அவர் சரியாக பயன்படுத்தி சதம் அடித்துள்ளார். இந்திய அணி 36 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது.
மழை குறுக்கீட்டால் ஆட்டம் சிறிது நேரம் மட்டுமே பாதிக்கப்பட்டதால், மீதமுள்ள 3 ஓவர்களுக்கு பேட்டிங் செய்ய இந்திய அணி மீண்டும் களமிறங்கியது. தொடக்கம் முதலே சிறப்பாக பந்துவீசி வந்த ஆமீர் விராட் கோலி விக்கெட்டையும் வீழ்த்தினார். அவர் 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.
அதன்பிறகு, ஜாதவ் மற்றும் விஜய் சங்கர் தலா ஒரு பவுண்டரி அடித்து இந்திய அணியின் ஸ்கோரை 330 ரன்களை கடக்கச் செய்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 15 ரன்களுடனும், ஜாதவ் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆமீர் 10 ஓவர்களில் 47 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹசன் அலி மற்றும் வஹாப் ரியாஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
கோலி சர்ச்சை விக்கெட்:
ஆமீர் வீசிய பவுன்சர் பந்தை கோலி அடிக்க முயன்றார். ஆனால், அது பேட்டில் படாமல் கீப்பரிடம் சென்றது. ஆமீர் நடுவரிடம் அவுட் கேட்க, நடுவர் எதுவும் கூறவில்லை. ஆனால், விராட் கோலி பேட்டில் பட்டதாக உணர்ந்து பெவிலியனுக்கு திரும்பினார். ஆனால், ரீபிளேவில் பந்துக்கும் பேட்டிற்கும் இடையே இடைவெளி இருப்பது நன்றாக இருந்தது. எனவே, கோலி அவுட் இல்லாததற்கு, நடுவர் அவுட் தெரிவிக்காததற்கு அவுட் என்று எண்ணி ஆட்டமிழந்துள்ளார்.