இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், சேஸிங் செய்த போது இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தோனியை போல ஹெலிகாப்டர் ஷாட் அடித்த விடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
விராத் கோலியின் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் இவ்விரு அணிக்களுக்கு இடையே முதல்கட்டமாக நடந்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றுமுன் தினம் ப்ரிஸ்டோல் நகரில் நடந்த தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டியில், இங்கிலாந்து 198 ரன்களை குவித்தது.
இதைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி 62 ரன் எடுத்த நிலையில் இரண்டு விக்கெட்களை இழந்த போது இந்திய கேப்டன் கோலி களத்தில் நுழைந்தார். அவரும் தொடக்க வீரர் ரோகித் ஷர்மாவும் சிறப்பாக பார்டனர்ஷிப் செய்து விளையாடி வந்ததனர்.
ஹேலிகாப்டர் ஷாட்:
குறிப்பாக 14 வது ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் லியம் ப்ளங்கட்டின் பந்தை எதிர்கொண்ட சேஸிங் மன்னன் கோலி தல தோனியை போல ஹேலிகாப்டர் ஷாட்டை ஆஃப் சைடில் சிக்ஸராக விளாசி ரசிகர்களை உற்சாகபடுத்தினார். தற்போது இந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
மேலும் தோனியின் டிரேட்மார்க் ஹேலிகாப்டர் ஷாட்டை அவ்வபோது இந்திய வீரர்கள் பின்பற்றி வருகின்றனர்.
டி20 தொடரை வென்ற இந்திய அணி நாளை தொடங்கும் மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்தியா ஒருநாள் அணி: விராத் கோஹ்லி (இ) , ஷிகார் தவான் , ரோகித் சர்மா , லோகேஷ் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர் , டோனி , தினேஷ் கார்த்திக் , யுஜவேந்திர சாஹல் , குல்தீப் யாதவ் , ஸ்ரதுல் தாக்கூர் , ஹர்திக் பாண்டிய , சித்தார்த் கவுல் , புவனேஸ்வர் குமார் , சுரேஷ் ரெய்னா , உமேஷ் யாதவ் , அக்சர் படேல்
இங்கிலாந்து ஒருநாள் அணி: இயோன் மோர்கன் (இ) , ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் , அலெக்ஸ் ஹேல்ஸ் , ஜோ ரூட் , ஜோஸ் பட்லர் , மொயின் அலி , பென் ஸ்டோக்ஸ் , டேவிட் வில்லி , லியாம் பிளென்கட் , அடில் ரஷீத் , மார்க் வூட் , ஜேக் பால் , சாம் கிர்ரன்