கடந்த சில மாதங்களுக்கு முன்னால் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற்றது.
அவ்வப்போது விராட் கோலி சமூக வலைத்தளங்களில் பல்வேறு வீடியோக்களை வெளியிடுவார்.இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் கார்டியோ உடற்பயிற்சியை தாம் செய்து முடித்த பின்னரும் கூட, மனைவி அனுஷ்கா சர்மா அதிகமாகச் செய்வதாக விராட் கோலி பாராட்டியுள்ளார்.
ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு விதமான சேலஞ்ச் ட்விட்டரில் வலம்வருவது வழக்க்கம். ஏதாவது ஒரு நல்லெண்ண நோக்கத்தோடு பிரபலங்கள் தொடங்கிவிடும் இந்த சேலஞ்ச்கள், கொஞ்ச நாளுக்கு வைரலாகிக் கொண்டிருக்கும். அந்த வகையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான ராஜ்யவர்தன் சிங் ஃபிட்னஸ் சேலஞ்ச் ஒன்றை தொடங்கிவைத்தார்.
அதன்படி, இந்தியாவில் உள்ள அனைவரும் ஃபிட்டாக இருந்தால்தான் இந்தியாவும் ஃபிட்டாக இருக்கும் என்ற நோக்கத்தையும் அதில் பதிவுசெய்து, அதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோரை டேக் செய்தார்.
அதைத் தொடர்ந்து விராட் கோலி, அனுஷ்கா சர்மா என பலரும் தாங்கள் ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு, மற்றவர்களையும் டேக் செய்து பரப்பினார்கள். இந்த சேலஞ்சைப் பொருத்தவரை அனைவரும் தாங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையே வெளியிட்டு வருகின்றனர்.
இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஒரு பயிற்சியை வீடியோவில் செய்து காட்டி, பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன், விராட் கோலி, சாய்னா நேவால் ஆகியோரை டேக் செய்து, அவர்களும் செய்ய வேண்டுமென்று சேலஞ்ச் செய்திருந்தார். ஏற்கெனவே ஃபிட்னெஸில் அதிக ஆர்வம் கொண்ட விராட் கோலி, நேற்று முன் தினம் அதைச் செய்து முடித்துவிட்டு, தன் பங்குக்கு அனுஷ்கா சர்மா, தோனி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு சேலஞ்ச் செய்திருந்தார். மோடி இந்த சேலஞ்சை ஏற்றுக்கொள்வதாக நேற்று பதில் கூறியிருக்கிறார். விராட் செய்த பயிற்சியின் பெயர், `ஸ்பைடர்மேன் ப்ளாங்க்’ (Spiderman Plank)