விமானத்திலும் சக வீரர்களை கிண்டலடித்து கேலி செய்த ஹர்திக் பாண்டியா; மூக்குடைத்து அனுப்பிய தல தோனி !!

 விமானத்திலும் சக வீரர்களை கிண்டலடித்து கேலி செய்த ஹர்திக் பாண்டியா; மூக்குடைத்து அனுப்பிய தல தோனி

சக வீரர்களை ஜாலியாக கிண்டல் செய்த ஹர்திக் பாண்டியை ரஸ்க் கொடுத்து அனுப்பியிருக்கிறார் தோனி.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

இங்கிலாந்துக்கு செல்லும் பயண நேரத்தில் இந்திய வேக பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியா சக இந்திய வீரர்களுடன் ஜாலியாக  பேட்டி ஒன்றை விமானத்தில் பதிவு செய்திருந்தார். அதை பிசிசிஐ தனது பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறது.

அதில் ஹர்திக் பாண்டியாவும், சாகலும் மைக் பிடித்து கொண்டு இந்திய கிரிக்கெட் அணியினரிடம் ஜாலியாக கிண்டல்  செய்துக் கொண்டே கேள்வி கேட்கின்றனர். உமேஷ் யாதவ், குல்திப் யாதவ், மனிஷ் பாண்டே என அனைவரிடமும் சிறிய பேட்டி கண்ட ஹர்திக் பாண்டியா அடுத்து தனது இருக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் தினேஷ் கார்த்திக்கிடம் செல்கிறார்.

அதனைத் தொடர்ந்து கே. எல். ராகுல், ரோஷித் சர்மவிடம் ஜாலியாக உரையாற்றி ஹர்திக் பாண்டியா கடைசியாக திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த தோனியிடம் செல்கிறார்.

வீடியோ;

 அங்குதான் வேடிக்கை,  பாண்டியா ஹாய் மகி பாய் என்று ஆரம்பிப்பதற்குள்.. தோனி தனது கையில் வைத்திருந்த ரஸ்க் ஒன்றை கொடுத்து கிளம்பு கிளம்பு என்பதை போன்று செய்கையாலே ஹர்திக் பாண்டியாவை நோஸ் கட் செய்து அனுபினார், எதுவும் பேச முடியாத ஹர்திக் பாண்டியாவும் “பாய் மஹி பாய்” என்று கூறிவிட்டு நடையை கட்டினார்.

அடுத்ததாக தோனிக்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்த ஷிகர் தவானிடம் ஹர்திக் பாண்டியா செல்ல ஷிகர் தவானோ கூலாக ஒரு பாட்டு பாடி இந்த பேட்டியை நிறைவு செய்து கொடுத்தார்.

Mohamed:

This website uses cookies.