வீடியோ: 12 வருடத்திற்கு முன் தங்கமகன் யுவராஜ் சிங் சிங்கமாக 6 சிக்ஸர் விளாசிய அற்புத காட்சி!

DURBAN, SOUTH AFRICA - 19 September: Six no. 5, India's Yuvraj Singh hits six sixes off Stuart Broad of England in one over for his 58 runs off 16 balls during the ICC Twenty20 Cricket World Championship Super Eights match between England and India at Kingsmead on September 19, 2007 in Durban, South Africa. (Photo by Duif du Toit/Gallo Images/Getty Images)

இந்திய அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திங்கள்கிழமை (ஜூன் 10, 2019) ஓய்வு பெற்றார்.

பஞ்சாபைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான யுவராஜ் சிங், கடந்த 2011-உலகக் கோப்பையில் இந்தியா கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார். ஒருநாள், டி 20 ஆட்டங்களில் அபாரமாக ஆடிய நிலையில், புற்றுநோய் பாதிப்பால், கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து சிறிது சிறிதாக விலகினார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் யுவராஜ் சிங் (37) அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

MONACO – FEBRUARY 26: Yuvraj Singh speaks during the Laureus Power Of Sport Digital Night at Meridien Beach Plazza on February 26, 2018 in Monaco, Monaco. (Photo by Boris Streubel/Getty Images for Laureus)

கடந்த 17 ஆண்டுகளாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருகிறேன். இந்த 22 யார்டுகளில் சுமார் 25 வருடங்களை கழித்துவிட்டேன். வாழ்க்கைப் போராட்டத்தையும் எனக்கு கிரிக்கெட் தான் கற்றுக்கொடுத்தது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம். எனது கிரிக்கெட் வாழ்க்கை பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது. அது தற்போது நிறைவடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

40 டெஸ்ட், 304 ஒருநாள் மற்றும் 58 டி20 என மொத்தம் 402 சர்வதேசப் போட்டிகளில் யுவராஜ் சிங் களமிறங்கியுள்ளார். 19 வயது இளைஞராக 2000-ம் வருடம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சர்வதேச அரங்கில் அடியெடுத்து வைத்த யுவராஜ், 2003 நாட்வெஸ்ட் டிராஃபியை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.

DURBAN, SOUTH AFRICA – 19 September: Six no. 5, India’s Yuvraj Singh hits six sixes off Stuart Broad of England in one over for his 58 runs off 16 balls during the ICC Twenty20 Cricket World Championship Super Eights match between England and India at Kingsmead on September 19, 2007 in Durban, South Africa. (Photo by Duif du Toit/Gallo Images/Getty Images)

டி20 போட்டிகளில் 12 பந்துகளில் அரைசதம் கடந்ததே தற்போது வரை சாதனையாக உள்ளது. மேலும் 2000-ம் ஆண்டு யு-19 உலகக் கோப்பை, 2007 டி20 உலகக் கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றை இந்தியா கைப்பற்ற முக்கியப் பங்காற்றியுள்ளார். இதில் யுவராஜின் சாதனைகள் அளப்பரியது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக யுவராஜ் சிங் இன்று அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து டிவிட்டரில் முன்னாள் வீரர்கள் விரேந்திரசேவாக், முகமது கைப் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் யுவராஜ் சிங்கிற்கு வாழ்த்து செய்திகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அவற்றில் சில டிவிட்டுகள் பின்வருமாறு:-

 

Sathish Kumar:

This website uses cookies.