உலக கோப்பை (19 வயது) லீக் போட்டியில் இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.
ஐ.சி.சி., சார்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்திய அணி, ‘பி’ பிரிவில் இடம் பெற்றது. முதல் இரு போட்டியில் ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியாவை வென்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே, பேட்டிங் தேர்வு செய்தது.
அன்குல் அபாரம்
ஜிம்பாப்வே அணிக்கு மதேவெரே (30) சற்று உதவினார். இந்திய தரப்பில் கடந்த போட்டியில் 5 விக்கெட் சாய்த்த அன்குல் ராய், நேற்றும் ‘சுழலில்’ ஜொலித்தார். இவரிடம் முதலில் ஷும்பா (36) அடுத்து கேப்டன் ரோச்சே (31) சிக்கினர்.
தொடர்ந்து அசத்திய இவர், சிம்ஹின்யா (0), நுன்குவை (2) வெ ளியேற்றினார். ஜிம்பாப்வே அணி 48.1 ஓவரில், 154 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய தரப்பில் அன்குல் ராய் 4, அர்ஷ்தீப் சிங், அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
ஷப்மன் அசத்தல்
எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு இம்முறை ஷப்மன் கில், ஹர்விக் தேசாய் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது.
இந்த சுப்மன் கில், ஆடும் ஷார்ட் ஆர்ம் புல் ஆஓடியே விராட் கோலி ஆடுவது போலவே இருக்கிறது.
அந்த வீடியோ கீழே :
இவருக்கு சூப்பர் ‘கம்பெனி’ கொடுத்த ஹர்விக், தன்பங்கிற்கு அரைசதம் அடிக்க, இந்திய அணி வெற்றியை நோக்கி ஜோராக முன்னேறியது. கடைசியில் மையர்ஸ் பந்தில் ஷப்மன் கில் ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி, 21.4 ஓவரில், 155 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லீக் சுற்றில் 100 சதவீத வெற்றியுடன் 6 புள்ளி பெற்ற இந்திய அணி, சூப்பர் லீக் தொடரில் காலிறுதிக்கு முன்னேறியது. வரும் 26ம் தேதி நடக்கும் இப்போட்டியில் இந்திய அணி, வங்கதேசம் அல்லது கனடா அணியை சந்திக்கவுள்ளது