இதுவரை நாம் கிரிக்கெட் வரலாற்றில் பல வினோதமான அவுட்களை பார்த்துள்ளோம், ஆனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவராஜ் சிங் பதிவிட்ட வினோதமான அவுட் அனைவரையும் ஆச்சரிய படுத்தியது. அது அவுட் இல்லை என்று ரசிகர்களுக்கே தெரிந்தும், அதை அவுட் என்று கூறினார் நடுவர், ஆனால் அதைப்பற்றி எதுவும் பேசாமல் பேட்ஸ்மேன் அமைதியாக வெளியே சென்று விட்டார்.
இந்த போட்டி 2007-இல் சர்ரே மற்றும் லீட்ஸ்-ப்ராட்போர்ட் இடையேயான எம்.சி.சி பல்கலை கிரிக்கெட் போட்டி. ஆனால், இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் போலவே யுவராஜ் சிங்கும் இப்போது தான் பார்த்துள்ளார், அதை பார்த்து மிரண்டு போன அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
பவுலர் வீசிய பந்து பேட்ஸ்மேனின் பேட் பக்கம் கூட செல்லவில்லை. ஆனால், நடுவர் திடீரென்று அவுட் என கூறிவிட்டார், அதற்கு முன்பு எதிரணியின் பந்துவீச்சாளர் மற்றும் பீல்டர்கள் யாருமே அப்பீல் கூட செய்யவில்லை. ஆனால், எந்த வித பிரச்சனை செய்யாமல் பேட்ஸ்மேன் நடையை கட்டிவிட்டார்.
சிலர் நடுவர் ஏமாற்றிவிட்டார் என கூறுகிறார்கள், சிலர் அந்த நடுவர் தீர்ப்பை எதிர்க்க கூடாது என பேட்ஸ்மேனும் அமைதியாக சென்று விட்டார் என்று சொல்கிறார்கள், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நடுவர் அவுட் கொடுக்க, பேட்ஸ்மேனும் அமைதியாக வெளியே செல்ல ஒரு காரணம் இருக்கிறது.
அந்த பேட்ஸ்மேன் அவுட் ஆனதற்கு முன் பந்தில் அவர் ஸ்டம்பை அடித்துவிட்டார், ஆனால் அந்த பந்தை ‘டெட்’ என கூறிய பிறகு தான், அவர் ஸ்டம்பை அடித்தது கவனித்தார். இதனால், இரண்டு அணிகளின் வீரர்களும் பேசி, அடுத்த பந்தில் அவுட் ஆகவேண்டும் என்று கூறினார்கள். அடுத்த பந்தில் அந்த பந்தை பேட்ஸ்மேனின் பேட்டில் படவே இல்லை, ஆனால் நடுவர் அவுட் கூறிவிட்டார். இதனால், பேட்ஸ்மேனும் அமைதியாக சென்று விட்டார்.
ரன் விவர பட்டியலில் அவர் அடித்த பந்தை முகமது அக்ரம் பிடித்ததாக கூறியுள்ளார்கள். அப்பொழுது இருந்த நடுவர் இயான் கோல்ட், ஐசிசி-யின் நடுவர் குழுவில் உறுப்பினராக இருக்கிறார்.