தனது உடற்தகுதியை நிரூபிக்கும் விதமாக யுவராஜ் சிங், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் அனுபவ வீரரான யுவராஜ் சிங், இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்தவர். இந்திய அணியில் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து ஆடிவருகிறார். 2003, 2007, 2011 ஆகிய உலக கோப்பைகளில் யுவராஜ் சிங் ஆடியுள்ளார். 2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அந்த உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் தான் வென்றார். 2011 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே யுவராஜின் பங்களிப்பு அளர்ப்பரியது.
அதேபோல ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி, அரிய சாதனையை நிகழ்த்தியவர். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ள யுவராஜ் சிங், கடந்த ஓராண்டாக இந்திய அணியில் ஆடவில்லை. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் யுவராஜ் ஆடினார். அதன்பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், இந்திய அணியில் இடம்பெறவில்லை.
அதன்பிறகு கடந்த ஓராண்டாகவே யுவராஜ் சிங் இந்திய அணியில் ஆடவில்லை. யுவராஜ் சிங் யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததன் எதிரொலியாக, அவரது உடற்தகுதி மீது விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்தன.
இந்நிலையில், அவரது உடற்தகுதி குறித்த விமர்சனங்களையும் சந்தேகங்களையும் முன்வைத்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் யுவராஜ் சிங்.
யுவ்ராஜ் சிங் என்றாலே சட்டென நினைவுக்கு வருவது ஆறு சிக்ஸர்களும், அதிரடி பேட்டிங் ஸ்டைலும்தான். அவரைக் கோபப்படுத்தி விடாதே.. இல்லைன்னா களத்துல நிறைய அடி வாங்க வேண்டியிருக்கும் என எதிரணி வீரர்களை முணுமுணுக்கச் செய்த வித்தைக் காரர் யுவ்ராஜ் சிங்.
ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஓய்வுக்குப் பிறகு அணியில் மீண்டும் வந்தாலும், அவரது பழைய வேகத்தைப் பார்க்க முடியவில்லை. பல சமயங்களில் பந்துகளைப் பார்த்து பயந்து குனியும் யுவ்ராஜ் சிங்கைப் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். குறிப்பாக ஃபிட்னெஸைக் கவனிக்கும் அளவுக்கான வயது அவருக்கில்லை. வயதாகிவிட்டது. இனிமே சொந்த வேலைகளைப் பார்க்க வேண்டியதுதான் என கேலி செய்யத் தொடங்கினர்.
இந்நிலையில், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் யுவ்ராஜ் சிங். மேலும், அந்த வீடியோவுக்கு கீழ், “போன வருடம் என்னிடம் சிலர் உனக்கு வயதாகிவிட்டது. சொந்த வேலைகளைக் கவனிக்கத் தொடங்கு என அறிவுரை வழங்கினர். என்னால் இதையெல்லாம் திரும்பச் செய்யமுடியாது என்று சொல்லாதீர்கள். ஏனெனில், இலக்கை அடையும் வரை நான் திரும்பத் திரும்ப இதைச் செய்துகொண்டேதான் இருப்பேன்” என கேப்ஷனாக பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் BMW வின் புதிய மாடல் பைக்கை சண்டிகரில் வாங்கியுள்ளார். விறபனைக்கு வந்தவுடன் இந்த வண்டியை வாங்கும் முதல் செலிபிரிட்டி இவர் தான். சுமார் 3 லட்ச ருபாய் மதிப்பிலான வண்டி இது.