ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடானான நேற்றையை போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றிக்கு சதம் விளாசி முக்கிய காரணமானவராக விளங்கினார் ஷேன் வாட்சன்.
புனேவில் வெள்ளிக்கிழமை ராஜஸ்தானுடன் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு உதவிக்கு வித்திடார்.
சென்னையின் வெற்றியை சமூக வலைதளங்களில் பலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அதே வேளையில் மற்றும் சிலர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை கிண்டல் செய்து பதிவுகளையிட்டு வந்தனர்.
பெங்களூர் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட வீரர்கள் (கெயில், வாட்சன்) பிரகாசமாக விளையாடி வருவதால் அதனை குறிப்பிட்டு ஆர்சிபி அணியை நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர்.
இதோ அவற்றில் சில பதிவுகள்:
தலவெறியன் பிரவீன்
ஆனால் எனக்கு தெரிஞ்சு மற்ற டீம்ல இருந்து வந்த வீரர்கள் ஒவ்வொரு சீசன்லயும் CSK டீம்காக நல்ல விளையாடுறத பார்க்க முடியுது…
Moses Snowin Viswasam
வாட்சன் அடிக்குற ஒவ்வொரு அடியும் ஆர்சிபி பேன்ஸ்க்கு வயிறு எரியும்