இவுங்க ஒழுங்கா விளையாடலேனா அவர் என்ன செய்வாரு..? ராகுல் டிராவிட்டிற்கு ஆதரவாக பேசிய விராட் கோலியின் பயிற்சியாளர் !!

இவுங்க ஒழுங்கா விளையாடலேனா அவர் என்ன செய்வாரு..? ராகுல் டிராவிட்டிற்கு ஆதரவாக பேசிய விராட் கோலியின் பயிற்சியாளர்

ராகுல் டிராவிட்டின் எந்த திட்டமும் வெற்றிகரமாக அமையவில்லை என்று விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

2021 டி.20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியதன் காரணமாக இந்திய அணியின் தலைமை பயிர்ச்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியை மாற்றிவிட்டு ராகுல் டிராவிட்டிற்கு தலைமை பயிற்சியாளர் பதவி கொடுக்கப்பட்டது.

அன்றிலிருந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட் மற்றும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆகிய இருவரின் கூட்டணியும் இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற்றுக் கொடுத்தது.

அடுத்தடுத்த தொடர்களை தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டு வந்த இந்திய அணி நிச்சயம் ஆசியக் கோப்பை,2022 டி.20உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்திய அணி வழக்கம்போல் ஆசியக் கோப்பை, 2022 டி20 உலக கோப்பை தொடர் என அடுத்தடுத்து முக்கியமான தொடர்களில் தோல்விகளை சந்தித்து.இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆகிய இருவரின் பதவி குறித்து இந்திய வட்டத்தில் கேள்வி எழும்பி வந்தது.

இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை இந்திய அணி மோசமாக தோல்வியை தழுவியதன் மூலம் இந்த கேள்வி தற்பொழுது இந்திய கிரிக்கெட் வட்டத்தில் விவாதமாக மாறியுள்ளது. ஆனால் ஒரு சிலர் இன்னும் ராகுல் டிராவிட்டிர்க்கும் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கும் ஆதரவாக தான் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, ராகுல் டிராவிட் திட்டங்கள் செயல்படவில்லை என்பதால் ராகுல் டிராவிட் நல்ல பயிற்சியாளர் இல்லை என்றாகிவிடாது என தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்குமார் சர்மா தெரிவித்ததாவது, “நான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தோல்வியை சந்தித்து விட்டார் என கூறவில்லை, ஆனால் அவருடைய சில திட்டங்கள் மற்றும் யோசனைகள் வெற்றியை கொடுக்கவில்லை, துரதிஷ்டவசமாக ராகுல் டிராவிட்டின் யுக்திகள் வேலைக்காகவில்லை, இதனால் அணியின் பயிற்சியாளரை குறை சொல்வது தவறாகும், முடிவு சரியாக வரவில்லை என்பதால் அவர் வெற்றிகர பயிற்சியாளரில்லை என நாங்கள் நினைக்கவில்லை” என்று ராஜ்குமார் சர்மா தன்னுடைய ஆதரவான கருத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.