எந்த குழப்பமும் இல்ல… அந்த விசயத்துல நாங்க ரொம்ப தெளிவா இருக்கோம்; ராகுல் டிராவிட் அதிரடி பேச்சு !!

எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டே இந்திய அணி கட்டமைக்கப்பட்டு வருவதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான பேச்சு தற்பொழுதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது, கடந்த 2021 உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி மோசமாக விளையாடி அரையிறுதிச் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் பாதியிலேயே வெளியேறியதும்.

இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு காரணமாக இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் சமபல அணியை தேர்வு செய்யவில்லை என்றும், மேலும் காயத்தில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவை தேவையில்லாமல் அணியில் இணைத்ததும் தான் என்றும் பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் 2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைகளை நீக்கி ஒரு தரமான அணியை இந்திய அணி செய்ய வேண்டும் என்று பலரும் பல்வேறு விதமான யோசனைகளை இந்திய அணிக்கு கொடுத்து வருகின்றனர்.

அனைத்து யோசனைகளையும் கேட்டுக்கொண்டு 2022 உலகக் கோப்பை தொடருக்கான ஒரு முன்னேற்பாடாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து உலக கோப்பை தொடருக்கு தேவைப்படும் வீரர்களை இந்திய அணி பரிசோதித்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்கள் சந்திப்பில் 2022 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் திட்டம் என்ன என்பது குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர்,“2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி எப்படி இருக்கவேண்டுமென்று எனக்கும், தேர்வாளர்கள் குழுவிர்க்கும், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிர்க்கும் நன்றாகவே தெரியும்,இதற்காக ஒரு புதிய வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்பதெல்லாம் கிடையாது, ஆனால் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமபலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் அதிக கவனமாக உள்ளோம், ஏற்கனவே அணியில் இருக்கும் சிறப்பான வீரர்களையும் அவர்களுடன் புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறோம், மேலும் ஒவ்வொரு வீரருக்கும் பணிச்சுமை இல்லாதவாறு தனி கவனம் எடுத்து பார்த்துக்கொண்டு வருகிறோம், 20 ஓவர் தொடர் என்பது மிகவும் சவாலான ஒரு தொடராகும், இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக செயல்படவேண்டும். மிகவும் குறுகிய காலத்தில் ஒரு வீரரின் திறமையை எடை போட முடியாது இதன் காரணமாக ஒவ்வொரு வீரருக்கும் போதுமான வாய்ப்பை அளிப்பதற்கு முயற்சி செய்து வருகிறோம்”,என்று ராகுல் டிராவிட் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.