ஒரு போட்டியின் வெற்றியுடன் ஓய்ந்துவிட மாட்டோம்: விராட் கோலி

India's captain Virat Kohli gestures to teammates during play on the first day of the fifth Test cricket match between England and India at The Oval in London on September 7, 2018. (Photo by Ian KINGTON / AFP) / RESTRICTED TO EDITORIAL USE. NO ASSOCIATION WITH DIRECT COMPETITOR OF SPONSOR, PARTNER, OR SUPPLIER OF THE ECB (Photo credit should read IAN KINGTON/AFP/Getty Images)

அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 31 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி புதிய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

ஆஸ்திரேலியாவுக்கு இதுவரை 11 முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அதில் 9 முறை முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்திருந்தது. 2 முறை மட்டுமே சமன் செய்திருந்தது. ஆனால், ஒருமுறை கூட முதல்டெஸ்ட் போட்டியை வென்றதில்லை. இப்போது தொடரின் முதல் டெஸ்ட்போட்டியை வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

 

இந்த வெற்றிக்காக இந்திய அணி 10 ஆண்டுகள் காத்திருந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெறும் 6-வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதற்கு முன் கடந்த 2008-ம் ஆண்டு பெர்த் மைதானத்தில் கும்ப்ளே தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் அடுத்த வெற்றிக்காக ஏறக்குறைய 10 ஆண்டுகள் காத்திருந்தது இந்திய அணி.

ஆட்ட நாயகனாக சட்டீஸ்வர் புஜாரா தேர்வு செய்யப்பட்டார். அடிலெய்டில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்தது.முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி 250 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 235 ரன்களும் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதையடுத்து 323 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

4-வது நாளான நேற்றைய ஆட்டநேர இறுதிவரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் சேர்த்திருந்தது. மார்ஷ் 31 ரன்கள், ஹெட் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இன்றைய கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

காலை நேரப் பனியையும், குளிரையும் பயன்படுத்திய இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக லைன் லென்த்தில் பந்துவீசினார்கள். குறிப்பாக இசாந்த் சர்மா, பும்ராவின் பந்துகள் ஏராளமானவே பீட்டன் ஆகின. இதனால், ரன் சேர்க்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

இசாந்த் சர்மா வீசிய 57வது ஓவரில் ‘ஷார்ட் பிட்ச்சாக’ வந்த பந்தை அடிக்க ஹெட் முயன்றார். ஆனால், கல்லியில் நின்றிருந்த ரஹானேயிடம் பந்து தஞ்சம் அடைந்தது. ஹெட் 14 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து பைன் களமிறங்கினார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர், ஆனால், ரன்களை ஸ்கோர் செய்ய முடியவில்லை. மார்ஷ் அரைசதம் எட்டினார். ஏறக்குறைய 18 ஓவர்கள் வரை இருவரும் நிலைத்தனர்.

பும்ரா வீசிய 73-வது ஓவரில் மார்ஷ் 60 ரன்கள் சேர்த்திருந்தபோது, ரிஷாப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பும்ரா வீசிய இந்தப் பந்து மிக அற்புதமானது. லைன் லெத்தின் சரியாக வந்த பந்தை அடிக்காமல் இருக்க முடியவில்லை, பேட்டை எடுத்து பந்தை விடவும் முடியாத குழப்பத்தில் ஷான் மார்ஷை தள்ளியது. கடைசியில் மார்ஷின் பேட்டில் பட்டு பந்து கேட்சாக மாரியது.

வெற்றிக்கு அருகே வந்துவிட்டதால் இந்திய வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசினார்கள். பைன், கம்மின்ஸ் களத்தில் இருந்து சமாளித்னர். பும்ரா வீசிய 84-வது ஓவரில் அடுத்த விக்கெட் விழுந்தது. ‘ஷார்ட் பிட்சாக வந்த இந்தப் பந்தை மிட்விக்கெட்டில் அடிக்க முற்பட்டார் பைன், ஆனால், பந்து பேட்டின் நுனியில் பட்டு ரிஷப் பந்திடம் கேட்சாக மாறியது. பைன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

100-வது ஓவரை வீசிய முகமது ஷமியின் பந்துவீச்சில் ஸ்டார்க் வெளியேறினார். ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து 28 ரன்களில் ஸ்டார்க் ஆட்டமிழந்தார்.

108-வது ஓவரை பும்ரா வீசினார். கோலியிடம் கேட்ச் கொடுத்து கம்மின்ஸ் 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

கடைசி விக்கெட்டுக்கு நாதன் லயான், ஹேசல்வுட் இணைந்தனர். இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை சோதிக்குமாறு களத்தில் நங்கூரமிட்டனர். ஓரளவுக்கு நன்றாக பேட் செய்யக்கூடியவர் லயன் என்பதால், அவ்வப்போது பவுண்டரிகளையும், ரன்களையும் சேர்த்து வெற்றி இலக்கை நோக்கி அணியை நகர்த்தினார்.

இதனால், டெஸ்ட் போட்டியை பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு ஒருநாள் போட்டியையும், டி20 போட்டியையும் பார்க்கும் பரபரப்பும், டென்ஷனும் எகிறியது. பும்ரா, அஸ்வின், இசாந்த் சர்மா , ஷமி என மாறி மாறிப் பந்துவீசியும் இருவரையும் பிரிக்க முடியவில்லை. ஏறக்குறைய 10 ஓவர்கள் வரை நிலைத்து ஆடி டென்ஷன் ஏற்றினார்கள்.

120 ஓவரை அஸ்வின் வீசினார். ஹாசில்வுட் பந்தை அடிக்க முற்பட அது பேட்டில் பட்டு ராகுலிடம் கேட்சாக மாறியது. ஹாசில்வுட் 13 ரன்களில் வெளியேறினார். லயான் 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி 119.5 ஓவர்களில் 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 31 ரன்களில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்தியத் தரப்பில் பும்ரா, அஸ்வின், ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

Sathish Kumar:

This website uses cookies.