‘நாங்கள் 500 ரன் விளாசுவோம்’ மார்தட்டும் இங்கிலாந்தின் ஜேசன் ராய்

இந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியால் 100 ரன்களை விளாசுவோம்  என்று அந்த அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் குறிப்பிட்டுள்ளா.

இதுகுறித்து அவர் கூறியதாவது கடந்த வருடம் கிட்டத்தட்ட 500 ரன்களை விளாசி விட்டோம். 2 ஓவர் இன்னும் அதிகமாக இருந்திருந்தால் கண்டிப்பாக அந்த இலக்கை தொட்டிருக்கும். இதனால் இப்போது ஏன் முடியாது கண்டிப்பாக 500 ரன்களை எங்களால் விளாச முடியும் என்று தெரிவித்துள்ளார் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் மற்றும் கேப்டன் ஃபின்ச் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அந்த அணிக்கு வார்னர் 43 ரன்கள் சேர்த்து ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து, களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையளித்தார்.

ஆனால், மற்ற பேட்ஸ்மேன்கள் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. 30 ரன்கள் வரை எடுத்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் அதை அரைசதமாக மாற்ற தவறினர். எனினும், ஸ்டீவ் ஸ்மித் அரைசதத்தையும் கடந்து சதம் அடித்து அசத்தினார். இதனால், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 102 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பிளங்கட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

298 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேஸன் ராய் 32 ரன்கள் எடுத்தும், பேர்ஸ்டோவ் 12 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும்  20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் களமிறங்கிய கேப்டன் பட்லர், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை அதிரடியில் மிரட்டினார். இதனால், அந்த அணியின் ரன் ரேட் அதிகரித்தது. பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக அடித்து வந்த பட்லர் 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வின்ஸும் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, வோக்ஸ் மற்றும் பிளங்கட் அந்த அணியை வெற்றி இலக்குக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், 40 ரன்கள் எடுத்து விளையாடி வந்த கிறிஸ் வோக்ஸ் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். பிளங்கட்டும் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Sathish Kumar:

This website uses cookies.