கவுண்ட்டி கிரிக்கெட் ஆடினால் இங்கிலாந்தில் நன்றாக ஆடுவோம் என்பதற்கு உத்தரவாதம் இல்லை: விராட் கோலி

இங்கிலாந்து தொடரை முன்னிட்டு இந்திய கேப்டன் விராட் கோலி அங்கு கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆட பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

சரே அணிக்கு அவர் ஆடலாம் என்று கூறப்பட்டலும் ஒப்பந்தம் என்று எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

Captain Virat Kohli raise the bat and acknowledge the crowd after he was out for 235 runs going to pavlion against England on the 4th Day play at wankhade stadium. Express photo by Kevin D’Souza. Mumbai 11-12-2016.

இந்நிலையில் ஐபிஎல் முடிந்த பிறகு ஜூன் மாத சீசனுக்கு அவர் இங்கிலாந்து செல்லலாம். அது இந்தியா இங்கிலாந்து தொடருக்குச் செல்லும் போது இன்னமும் அங்கு தன்னை நிலைநாட்டாத கோலிக்கு ஒரு அனுபவமாக இருக்கும் என்று கருதப்படுகிறது, இதனால் ஆப்கானுக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆடுவது சந்தேகம்தான்.

இதனையடுத்து என்.டி.டிவிக்கு விராட் கோலி கூறியதாவது:

கவுன்ட்டி கிரிக்கெட் ஆடுவது என் ஆட்டத்தை மேம்படுத்த உதவும். இது இன்னும் நம்மை போட்டிமனப்பான்மையுடன் சவால்களுடன் பிணைக்கும் விஷயமாகும்.

Bengaluru: India’s Virat Kohli celebrates the wicket of Australia’s Mathew Wade during the fourth day of the second test match between India and Australia at Chinnaswamy stadium in Bengaluru on Tuesday. PTI Photo by Shailendra Bhojak(PTI3_7_2017_000065B)

ஆனாலும் முன்னமேயே அங்கு சென்று ஆடுகிறோம் என்பதாலேயே நாம் அங்கு நன்றாக ஆடுவோம் என்பதற்கு எந்த வித உத்தரவாதங்களும் இல்லை.

இதன் மூலம் நமக்கு நாமே வாய்ப்புகளை பெருக்கிக் கொள்கிறோம் அவ்வளவே. அதாவது நமக்கு பழக்கமில்லாத ஒரு சூழலை நாம் தன்வயப்படுத்திக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது, முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது.

2014 தொடரில் இசாந்த் சர்மாவின் அபார ஸ்பெல் முன்னதாக ரஹானேயின் அதியற்புத சதம் ஆகியவற்றினால் லார்ட்ஸில் இந்தியா வெற்றி பெற்று முன்னிலை வகித்தாலும் அதன் பிறகு தொடரை 1-3 என்று இழந்தது. கோலி அந்தட் தொடரில் ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை, ஜேம்ஸ் ஆண்டர்சனின் செல்லப்பிள்ளையாக அவரிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Editor:

This website uses cookies.