250ஐ ஈஸியா கட்டுப்படுத்தீருப்போம்.. எங்களுடைய தோல்விக்கு இவர் தான் காரணம்! – பாட் கம்மின்ஸ் உருக்கமான பேச்சு!

“போட்டியின் முதல் நாளில் இருந்தே எங்களது ஆட்டத்தில் ஏற்ற இறக்கம் இருந்தது. நான் நம்பிய சில வீரர்கள் நன்றாக துவக்கம் அமைத்துக் கொடுப்பார்கள் என்று எண்ணினேன் அது நடக்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் எங்களுடைய பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக இல்லை.” போட்டிக்குப்பின் தோல்வி குறித்து பேசிய பாட் கம்மின்ஸ்!

இங்கிலாந்துக்கு சென்று ஆசஸ் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியது. ஏற்கனவே முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்று வலுவான முன்னிலையில் பெற்று தந்தது.

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மிச்சல் மார்ஸ் 118 ரன்கள் குறித்து பேட்டிங்கில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தார்.

முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தட்டுத்தடுமாறி 237 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே இறுதிவரை போராடி 80 ரன்களுக்கு அவுட் ஆனார். கேப்டன் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி பந்துவீச்சில் அசத்தினார்.

26 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 224 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. 250 ரன்கள் முன்னிலை பெற்று 251 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை. அதிகபட்சமாக ஜாக் கிராலி 44 ரன்கள் அடித்தார். ஸ்டோக்ஸ், ஜோ ரூட் இருவரும் சொற்பொருள்களுக்கு வெளியேறினர்.

ஹரி புரூக் பொறுப்புடன் விளையாடி 75 ரன்கள் அடித்து அவுட் ஆனார். கிறிஸ் வோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று 32 ரன்கள் அடித்துக் கொடுக்க, இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் அடித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த ஆஸ்திரேலியா ஆனியன் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், “இன்னிங்ஸில் சில தருணங்கள் எங்களுக்கு ஏற்றத்தையும் சில தருணங்கள் எங்களுக்கு இறக்கத்தையும் கொடுத்தது. முதல் இன்னிங்ஸில் 20 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தோம். பின்னர் போட்டி மாறிமாறி இருபக்கமும் சென்றது.

250 ரன்கள் டார்கெட்டை கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால் எங்களது பந்துவீச்சு அவ்வளவு தரமாக இல்லை. போட்டியில் மார்ஷ் மிகச் சிறப்பாக செயல்பட்டார். டெஸ்ட் போட்டிகளுக்காக விளையாட முயற்சித்த மார்ஷ் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் அணிக்கு வந்திருக்கிறார்.

எங்களது வீரர்கள் நன்றாகவே செயல்பட்டார்கள். கிடைத்த சில நாட்களில் நன்றாக ஓய்வு பெற்று, எங்களது ஆற்றலை திரும்ப பெற்றவுடன் மேன்செஸ்டர் போட்டியில் திரும்பவும் வெற்றியை பெறுவோம்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.