இந்தியாவா? பாகிஸ்தானா? ன்னு பாத்தா, எங்க டீம் தான் பெஸ்டு – வாய்விட்ட பாகிஸ்தான் வீரர்!

இந்திய அணி உடன் விளையாடும் பொழுது இந்த இடத்தில் தான் தவறு நேர்ந்துவிட்டது என்று தற்போது பேசியுள்ளார் பாகிஸ்தான் வீரர் சான் மசூத்.

டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று முடிவடைந்து நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கின்றன.

லட்டு போல கையில் அரையிறுதிக்கான வாய்ப்பு இருந்தும் அதை தவறவிட்டு இருக்கிறது தென்னாபிரிக்க அணி. இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு அந்த வாய்ப்பு கிடைத்து அதை பயன்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடன் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. ஆதலால் மற்ற அணிகளை நம்பி அரை இறுதி வாய்ப்புக்காக காத்திருந்தது. அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை தழுவியதால் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது.

பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்கள் சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் மிடில் ஆர்டரில் முகமது ஹாரிஸ், இப்திகார் அகமது மற்றும் ஷான் மசூத் ஆகியோர் மிகச் சிறப்பாக பங்களிப்பை கொடுத்து முக்கியமான கட்டத்தில் வெற்றிகளை பெற்றுத் தந்திருந்தனர்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத், இந்திய அணியுடன் ஏற்பட்ட தோல்வி குறித்து தற்போது பேசி இருக்கிறார். அவர் கூறுகையில்,

“இந்தியாவுக்கு எதிராக முக்கியமான சில இடங்களில் பாகிஸ்தான் தவறு செய்துவிட்டது. 8 பந்துகளில் 28 ரன்கள் அடிக்க வேண்டும் என இருந்தபோது நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என நினைத்தேன். சில தவறான பந்துகளால் தோல்வியை அடைந்து விட்டோம்.

அதேபோல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 96/7 என இருந்தபோது கடைசியில் அவர்களை 130 ரன்கள் வரை எடுக்க விட்டுவிட்டோம். அது எங்களுக்கு தவறாக முடிந்தது. இதுபோன்று சிறு சிறு தவறுகளால் தான் எங்களுக்கு இந்த தோல்வி நேர்ந்தது. ஆனால் நாங்கள் மிகச் சிறந்த அணி என்று இனி வரும் போட்டிகளில் நிரூபிப்போம்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.