இந்நிலையில் ஊடங்களில் சிலர் இவ்விரு வீரர்களுக்கு இடையே விரிசில் ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவி வருகிறது. இதுகுறித்து, ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கூறுகையில்,
நானும் ஸ்டீவ் ஸ்மித்தும் நீண்ட கால நெருங்கிய நண்பர்கள். இப்போதுகூட கனடாவில் ஒரே ஹோட்டலில் தங்கி நேரத்தை ஒன்றாக செலவிடுகிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கியதால் தான் இதுபோல வதந்திகள் எல்லாம் பரவி வருகிறது.
தவறு செய்ததால் இதுபோன்ற சம்பவங்களை கடந்து தான் வரவேண்டும். விளையாட தடை விதித்தபோது நானும் எனது குடும்பமும் மனரீதியாக வேதனை அடைந்தோம். நாங்கள் செய்த தவறை உணர்ந்து விட்டதால், உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
கனடா டி20 லீக் தொடரில் பங்கேற்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எங்களுக்கு மன நிம்மதியை தருகிறது. இப்போது என் முழுக்கவனமும் அந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவதில் தான் உள்ளது. இதன் மூலம் எனது கடினமான நாட்களை நிச்சயம் மாற்றிக்கொள்வேன்” என டேவிட் வார்னர் உறுதி அளித்துள்ளார்.
இதனால் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இருவர் குறித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கனடா டி20 லீக் தொடரில் பெரிதாக எதிர்பார்த்த டேவிட் வார்னர் தனது முதல் ஆட்டத்தில் இரண்டாவது பந்திலேயே வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினர். அடுத்த ஆட்டத்திலாவது டேவிட் வார்னர் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்துவாரா என ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.