சச்சின் டெண்டுல்கரின் முடிவை எதிர்த்து பேசிய ஆகாஷ் சோப்ரா கொந்தளிக்கும் ரசிகர்கள் .
முன்னாள் இந்திய வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா சச்சின் டெண்டுல்கரின் முடிவை எதிர்த்து பேசியுள்ளார் .சச்சின் டெண்டுல்கர் ஐசிசியின் டிஆர்எஸ் முறை குறித்து ஒரு ஆலோசனை அளித்து இருந்தார். அதாவது எல்பிடபிள்யூ கொடுக்கப்படும்போது 50 சதவீத பந்து ஸ்டம்பில் பட்டு இருந்தால் மட்டுமே அவுட் கொடுக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனை கொடுத்திருந்தார்.
இந்த விதி முன்னர் பந்து பட்டாலே கொடுக்கப்படும் என்று இருந்தது . இந்நிலையில் சசின் டெண்டுள்கர் இந்த ஆலோசனையை தெரிவித்து இதற்கு வரவேற்பும் பெற்றார். இதுகுறித்து அவர் ஏற்கனவே தன்னுடைய ஆண்ட்ராய்டு செயலில் ஒரு வீடியோ வெளியீட்டு குறிப்பிட்டார். இந்த ஆலோசனை குறித்து ஆகாஷ் சோப்ரா எதிர்ப்பு தெரிவித்த அவர் கூறுகையில்..
அடிப்படை விதிகளில் மாற்றம் செய்யக் கூடாது அது அறிவிலி தனமாக மாறி விடும். ஒரு முறை டிஆர்எஸ் கேட்டு விட்டால் மீண்டும் நடுவரிடம் செல்ல தேவையில்லை. நான் உங்கள் பின்னால் இருக்கிறேன் சச்சின்.
ஆனால், டெக்னாலஜியை நம்பவேண்டும். அதேநேரத்தில் உங்களிடமிருந்து மாறுபட்ட கருத்து என்னிடம் இருக்கிறது. பந்து ஸ்டம்பில் படுவதைப் பற்றி பேசினால் அது எப்படி செல்லுமோ அதைத்தான் பார்க்க வேண்டும். அப்படியே நம்மிடம் அவர்கள் காட்டுவதில்லை. இதன் காரணமாக பழைய விதியை இருக்க வேண்டும்,. என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர் எதிர்த்து பேசுகிறாயா என்று ட்விட்டர் தளத்தில் ரசிகர்கள் கொந்தளித்தனர்.