தென்ஆப்பிரிக்கா அணியால் எங்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்றால், எங்களால் அவர்களுக்கும் நெருக்கடி கொடுக்க முடியும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய அணி புறப்படுவதற்கு முன்பு அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அணி கேப்டன் விராட் கோலி ஆகியோர் பேட்டியளித்தனர்.
அப்போது, இந்திய அணிக்கு தென்ஆப்பிரிக்காவில் கடும் சவால் காத்திருக்கிறது. அதை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளனர் என்றார். இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்கா ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள் என்றால், எங்களாலும் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.
அனைவரும் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தென்ஆப்பிரிக்கா தொடர் சவாலாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், ஒவ்வொரு வீரர்களுக்கும் அழகானது’’ என்றார்.
யாருக்காகவும் இந்திய அணி நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் இந்திய அணி அடுத்து தென் ஆப்ரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.
தென்ஆப்பிரிக்காவுடன் அந்நாட்டு மண்ணில் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடுகிறது. டெஸ்ட் தொடர் ஜனவரி 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.
இந்திய அணி 2017-ம் ஆண்டில் தொடர் வெற்றிகளைக் குவித்து இருந்தாலும் பெரும்பாலானவை இந்திய மண்ணில் பெற்றவையாகும். இதனால் வெளிநாட்டு மைதானங்களில் அதிக வெற்றிகளை குவிக்கவில்லை என்ற விமர்சனம் இந்திய அணியின் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. மேலும், தென் ஆப்ரிக்காவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று 25 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி மீதான விமர்சனங்கள் குறித்து பதிலளித்த கேப்டன் விராட் கோலி, யாருக்காகவும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். மேலும், “எல்லா வகையான அழுத்தங்களுக்கு நடுவே வெளிநாட்டில் விளையாட வேண்டியுள்ளது. நாங்கள் மக்களுக்குதான் எங்களை நிரூபிக்க விரும்புகிறோம். எதுக்காகவும், எந்தவொரு தனிப்பட்ட நபருக்கும் அல்ல. நாங்கள் தென் ஆப்ரிக்கா செல்வோம். நாட்டிற்காக 100 சதவீதம் பங்களிப்பை செலுத்துவோம். வருகின்ற முடிவை ஏற்றுக் கொள்வோம்.
விளையாடுவது என்பது பேட்ஸ்மேனின் மனநிலை பொறுத்தது தான். அது உள்ளூர் ஆடுகளமாக இருந்தாலும், வெளிநாட்டு மண்ணாக இருந்தாலும் சரி, எல்லாம் ஒன்றுதான். நான் தென் ஆப்ரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரில் தான் விளையாடியுள்ளேன். புஜாரா, ரகானே உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.” என்றார்.