சிஎஸ்கேவைப் போலவே 2011ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக நடுவரிடம் சண்டை போட்ட தோனி! சம்பவமான அம்பயர்! வெளியான கோபம்!
தோனி தனது வீரர்களுக்காக எப்போதும் முன் களத்தில் நின்று களமாடும் ஒரு தலைவன். இதனை பலமுறை நாம் பார்த்து இருக்கிறோம். 2008 ஆம் ஆண்டு சௌரவ் கங்குலி ஓய்வு பெற்றபோது அவருக்கு கடைசியாக ஒரு முறை கேப்டன் பதவி கொடுத்து அழகு பார்த்த போதிலும் சரி, விராட் கோலி 2014ம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் சொதப்பிய போது அவருக்காக நின்று அவரை காப்பாற்றியதிலும் சரி தோனி தோனிதான்.
இதேபோன்று 2019 ஆம் ஆண்டு நடுவர் ஒரு தவறான முடிவை கொடுக்க வெகுண்டெழுந்த தோனி, களத்திற்குள்ளேயே வந்து நடுவரிடம் வாக்குவாதம் செய்தார் அப்போது சமூக வலைத்தளத்தில் அவரை கொண்டாடித் தீர்த்தனர். ரசிகர்கள் இதேபோன்று 2011ஆம் ஆண்டு தனது பந்துவீச்சாளர் பிரவீன்குமாருக்கு நடுவரிடம் சண்டை கட்டி அவரை முறைத்து விட்டு வெளியேறி இருக்கிறார் தோனி.
இதுகுறித்து தற்போது அதனை அனுபவித்த நடுவர் டேரில் ஹார்பர் பேசியுள்ளார். அவர் கூறுகையில்…
2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த போட்டியில் நான்தான் நடுவராக இருந்தேன். பந்து வீசி கொண்டிருந்த பிரவீன்குமார் தொடர்ந்து தனது கால்களால் ஆடுகளத்தை சேதப்படுத்தி கொண்டே இருந்தார். அவருக்கு நான் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருந்தேன்.
ஆனால் மீண்டும் மீண்டும் செய்தால் அந்த டெஸ்ட் போட்டி முழுவதும் அவருக்கு பந்துவீச தடை விதித்தேன். இதன் காரணமாக கேப்டனாக இருந்த தோனி என்னிடம் வந்து அவருக்கு இது தான் முதல் டெஸ்ட் போட்டி கொஞ்சம் கருணை காட்டலாமே? என்று கேட்டார்.
இதற்கு நான்…
பிரவீன்குமார் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே 52 ஒருநாள் போட்டிகளில் விளையாடி விட்டார் .அதனால் கருணை எல்லாம் கிடையாது என்றேன்.
உடனடியாக கடுப்பான…
தோனி உங்களிடம் எங்களுக்கு ஏற்கனவே பிரச்சனை இருக்கிறது. பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார் தோனி. ஏன் அவ்வாறு சொன்னார் என்று எனக்கு தெரியும்.
ஏனெனில்…
2001 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஆஷிஷ் நெஹ்ராவிற்கும் இதேபோல்தான் ஒரு தண்டனை கொடுத்தேன். இதன் காரணமாகத்தான் அவர் என்னை மிரட்டி விட்டுச் சென்றார் என்று கூறியுள்ளார் .