“ஒருநாள் உலக கோப்பையை விட்டோம்.. ஆனா டி20 உலகக் கோப்பை எங்களுக்குத்தான்..” இந்திய அணி பலே பிளான்

2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் டி20 போட்டிக்கான உலகக் கோப்பை தொடருக்கு, தற்போது இருந்தே பல திட்டங்களை வகுத்து வருகிறது இந்திய அணி நிர்வாகம்.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பாக கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்திய அணி கருதப்பட்டது. அந்த அளவிற்கு பலம் மிக்க ஒரு அணியாக அண்மையில் வலம் வந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக, அரையிறுதியில் கத்துக்குட்டியாக கருதப்பட்ட நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி வெளியேறி இந்திய ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது.

உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு நடுவரிசை பேட்டிங் சொதப்பலாக இருந்ததே காரணம் என அனைத்து தரப்பு விமர்சனங்களும் தெரிவித்தன. இதனால் நடுவரிசையில் பல மாற்றங்களைக் கொண்டுவர பிசிசிஐ முடிவு செய்தது. அணி வீரர்களை தேர்வு செய்வதிலும் தெரிவுக்குழுவிற்கு பிசிசிஐ கெடுபிடி விதித்துள்ளது.

இதனால் அடுத்தடுத்து தொடர்களுக்கு இந்திய வீரர்களை மிகவும் கவனத்துடன் தேர்வுக் குழு தேர்வு செய்து வருகிறது.

முதலாவதாக, மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய அணியில் கடந்த சில டி20 தொடரில் இடம் பெற்றுவந்த தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருநாள் போட்டிக்கான அணியிலும் தினேஷ் கார்த்திக் மற்றும் கேதர் ஜாதவ் இருவரும் நீக்கப்பட்டு மனிஷ் பாண்டே ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை உருவாக்குவதில், தற்போது இருந்தே தேர்வுக்குழு மிகவும் கவனமாக செயல்படுகிறது.

வழக்கமாக ஆடும் 11 வீரர்கள் யார் என்பதில் தெளிவாக இருந்தாலும், ஓரிரு வீரர்கள் சோதப்பினால், அவர்களுக்கு சரியான மாற்று வீரரை பயன்படுத்துவதிலேயே தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கு பல திட்டங்களை வகுத்துள்ளதாக தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு செல்லும் இந்திய டி20 அணி

அவர் கூறுகையில், இந்த உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என எதிர்பார்த்தோம். ஒரு சில தவறுகளினால் அது நடக்கவில்லை. ஆனால், 2020 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் அவ்வாறு இருக்காது. இப்போதிருந்தே பல திட்டங்களை வகுத்து வருகிறோம். பண்ட்டிற்க்கு தோனியின் ஆலோசனை அளிப்பதில் திட்டத்தில் துவங்கி, வாஷிங்டன் சுந்தர், மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் சஹார் போன்ற இளம் வீரர்களை தொடர்ந்து உபயோகப்படுத்தி அவர்களின் உச்சகட்ட திறனை கண்டறிந்து அதற்கேற்ப அணி உருவாக்கப்படும்” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.