”அத லாக்கர்ல வச்சுருக்கோம்… இந்தியா கிட்டதான் கட்டுவோம்”… சிரிப்பு வரும்படி பாக். முன்னால் வீரர் வக்கார் யுனிஸ்

இந்தியாவுக்கு எதிராக வரும் ஞாயிறன்று நடைபெறும் போட்டி மிக மிக முக்கியமானது, பாகிஸ்தான் தொடரில் இருக்க வேண்டுமெனில் சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் என்ன செய்ததோ அதிலிருந்து ஊக்கம் பெற்று இந்தியப் போட்டிக்குத் தங்களைத் தயார் படுத்திக் கொள்வது அவசியம் என பாக். அணிக்கு வக்கார் யூனிஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

“ஒரேயொரு விஷயம்தான்… பாகிஸ்தான் இந்தத் தொடரில் நிலைத்திருக்க வெண்டுமெனில் அவர்கள் ஏ+ ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். பாகிஸ்தான் – இந்தியா போட்டி என்றால் அது எப்போதுமே மிகப்பெரிய போட்டிதான். எப்போதையும் விட இப்போது மிக முக்கியமான போட்டியாக உள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதியில் இந்தியாவை வீழ்த்திய போட்டியிலிருந்து பாகிஸ்தான் அணி ஊக்கம் பெற வ்வேண்டும். இந்தியாவுக்கு எதிராக தங்கள் சிறப்பான ஆட்டத்தை பாகிஸ்தான் லாக்கரில் வைத்துள்ளனர் என்றே நம்புகிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நல்ல அணி என்பதை பாகிஸ்தான் காட்டியுள்ளனர்.

Pakistan under Sarfraz Ahmed defied all odds to beat arch-rivals India to lift the Champions Trophy in England in 2017. And former skipper Waqar Younis feels that the team has a good chance of coming back to the country in 2019 and win the World Cup.

இந்த உலகக்கோப்பையைப் பொறுத்தவரையில் தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை எனில் அவ்வளவுதான், பிரச்சினையில் சிக்கிக் கொள்கின்றனர். புதிய பந்து மிக முக்கியமானது. தொடக்க வீரர்களும் தொடக்கத்தில் அதிரடியெல்லாம் ஆட முடியவில்லை அவர்களும் நிதானித்துதான் தொடங்குகின்றனர். புதியப்பந்தில் விக்கெட்டுகளைச் சாய்க்கவில்லை எனில் அதன் பிறகு ஸ்விங்கும் இருக்காது ஒன்றும் இருக்காது எளிதாகப் போய்விடும்

ஆஸி.க்கு எதிராக புதிய பந்தில்தான் பாகிஸ்தான் சொதப்பியது. சர்பராஸ் அகமெட் சரியாகக் கேப்டன்சி செய்யவில்லை. ஆமிருக்கு எதிர் முனையில் சரியான ஆதரவு இல்லை.

ஆமிர் இவ்வளவு சிறப்பாக வீசுவார் என்று எதிர்பார்க்கவிலை. அவர் 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும். தொடக்கத்தில் இரண்டு முறை எட்ஜ் எடுத்தது ஆனால் அதிர்ஷ்டம் இல்லை.

25 ஒவர்களுக்குப் பிறகு பாகிஸ்தான் நன்றாக வீசியது, எங்கு போட வேண்டுமோ அங்கு போட்டது, விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு பிரச்சினைகள் கொடுத்தனர்.

ஆமிர் அவர் தனது கட்டர்கள், பல தினுசுகளான பந்து வீச்சை சரியாக வீசினார். ஆமிர் மன ரீதியாக வலுவானவர், எப்போதும் ‘கிளாஸ்’ நிரந்தரம். அவர் ஒரு மேட்ச் வின்னர் என்பதில் ஐயமில்லை.

ஷதாப் கான் இந்த அணிக்குத் தேவை, இந்தியாவுக்கு எதிராக அவரை நிச்சயம் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் 5 பவுலர்கள், அதாவது 4 வேகம் ஒரு ஸ்பின்னர் ஷதாப், எனில் ஷோயப் மாலிக்கை நீக்க வேண்டும்.

தோல்வீயிலிருந்து இந்திய அணியை எதிர்கொள்வது மிகக் கடினம். நிச்சயம் எளிதல்ல, இந்தியா ஒருவேளை ஆஸ்திரேலியா-பாக். போட்டியைப் பார்த்திருப்பார்கள், என்ன செய்ய வேண்டுமென்பதை திட்டமிட்டிருப்பார்கள். எனவே பாகிஸ்தான் நிச்சயம் தங்கள் ஆட்டத்திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும், ஞாயிறன்று பாகிஸ்தான் அணி தன்னில் சிறந்தவற்றைக் கொண்டு வரும் என்று நினைக்கிறேன்” என்றார் வக்கார் யூனிஸ்

Sathish Kumar:

This website uses cookies.