இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்தியாவை ஒருபொழுதும் ஜெயிக்க விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது இதில் முதல் போட்டி பிப்ரவரி 5 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது, கொரானா அச்சுறுத்தலின் காரணமாக ஒரு வருடம் இந்தியாவில் எந்த ஒரு சர்வதேச போட்டியும் நடைபெறவில்லை, இதனைத் தொடர்ந்து நடக்கவுள்ள இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கான போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும் கோலாகலமாக நடைபெறும் என்று ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கு முன் 2016-2017 இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண் ட இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் பங்கேற்றது ஆனால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியவர்களின் சுழலில் சிக்கி 4-0 என வாஷ் அவுட் ஆனது.
இன்னிலையில் இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் தெரிவித்துள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோ தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது நான் இரண்டு வருடங்களாக இந்தியாவில் ஐபிஎல் போட்டி விளையாடுகிறேன், ஆனால் தற்பொழுது தான் இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் முதல் சர்வதேச போட்டி விளையாட உள்ளேன் என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் இங்கிலாந்து அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் மொயின் அலி, டாமினிக் பெஸ் மற்றும் ஜாக் லீச் ஆகிய வீரர்கள் உள்ளனர். நிச்சயமாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். மேலும் இந்திய அணியின் சுழலில் சிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.