டெல்லி அணியின் இந்த மோசமான நிலைமைக்கு இது மட்டும் தான் காரணம்; வேதனையை வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங்
2023 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பரிதாப நிலைக்கு காரணம் என்னவென்பதை டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
2022 டிசம்பர் மாதம் ரிஷப் பண்டிர்க்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரால் ஒரு வருடம் இந்திய அணியில் மட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரிலும் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டதால் வேறு வழியே இல்லாமல் டேவிட் வார்னர் தலைமையில் டெல்லி அணி 2023 ஐபிஎல் தொடரை எதிர்கொண்டு விளையாடுகிறது.
ரிஷப் பண்ட் என்ற ஒரு வீரர் இல்லை என்பதால் டெல்லி அணியின் நிலைமை மோசமாக அமைத்துவிடாது என ஆரம்ப கட்டத்தில் பேசப்பட்டாலும், களத்தில் டெல்லி அணியின் நிலைமையே தலைகீழாக ஆகிவிட்டது, டெல்லி அணி இதுவரை 11 போட்டிகளை எதிர்கொண்டு வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்து 2023 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறியது.
இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் டெல்லி அணி செய்த தவறு என்ன எதனால் டெல்லி அணி பபிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் போனது என்பது குறித்து விரிவாக பேசி வருகின்றனர்.
அந்த வகையில் 2023 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் பரிதாப நிலைமைக்கு உண்மையான காரணம் என்ன என்பதை டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்கே செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் தெரிவித்ததாவது., ரிஷப் பண்டின் விபத்து எந்த ஒரு அணியாக இருந்தாலும் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக டெல்லி அணியின் கேப்டனாகவும் ஒரு ஸ்டார் வீரராகவும் திகழ்ந்த ரிஷப் பண்ட், டெல்லி அணியின் இதயத்துடிப்பாகவே திகழ்ந்தார். அவர் இல்லாமல் டெல்லி அணியில் மிகப்பெரிய ஓட்டையே ஏற்பட்டு விட்டது என்று கூறலாம், ரிஷப் பண்டிர்க்கு விபத்து ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஏலத்தில் எந்த வீரரை தேர்ந்தெடுக்க வேண்டும் எப்படி அணியை செட் செய்ய வேண்டும் என பக்காவாக திட்டம் வைத்திருந்தோம். ஆனால் அவருடைய விபத்து எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது” என ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.
மேலும் அணியில் தங்களிடம் இருந்த சிறந்த வீரர்களையே பயன்படுத்தியதாகவும் மேலும் அவ்வப்போது முக்கியமான வீரர்கள் தங்களுடைய சொந்த விஷயத்தின் காரணமாக விளையாடாமல் போனதால் இந்த வருடம் டெல்லி அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றும் ரிக்கி பாண்டிங் மற்றுமொரு பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.