ஒரு ‘’சாட்டையடி’’ வீரனை அணியில் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன்! முதன்முதலில் தோனி ஆடியபோது சவுரவ் கங்குலி உதிர்த்த வார்த்தைகள்!

ஒரு ‘’சாட்டையடி’’ வீரனை அணியில் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன்! முதன்முதலில் தோனி ஆடியபோது சவுரவ் கங்குலி உதிர்த்த வார்த்தைகள்!

இந்திய அணிக்காக கிட்டதட்ட 16 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியவர் மகேந்திர சிங் தோனி. தற்போது அவருக்கு 39 வயதாகிறது. இன்னும் ஒரு வருடத்தில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விடுவார் என்றே தெரிகிறது.

 இந்நிலையில் தோனி குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக அவர் முதன் முதலில் ஆடிய போட்டி முதன் முதலில் ஆடிய தொடர் என அனைத்தையும் குறித்த தகவல்களை முன்னாள் வீரர்களும் முன்னாள் தேர்வு குழுவினரும் வெளியிட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் முதன் முதலில் தோனி அணியில் தேர்வான போது அவரை கங்குலி பாராட்டி பேசிய வார்த்தைகள் பற்றி விவரித்துள்ளார் முன்னாள் இந்திய அணியின் மேலாளர் ஜாய் பட்டாச்சாரியா. அவர் கூறுகையில்…

 

 எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது 2004ஆம் ஆண்டு நானும் இந்திய அணியும் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது எனது அருகில் இருந்த இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி, தோனியை பற்றி வார்த்தை கூறினார். அதாவது ‘’நம் அணியில் ஒரு புதிய சாட்டையடி பேட்ஸ்மேன் இருக்கிறார்’’ அவரைப் பார்த்துக்கொண்டே இருங்கள். மிகப் பெரிய ஸ்டாராக வலம் வரப்போகிறார் என்று கூறினார்.

 

 அது வேறு யாருமில்லை மகேந்திரசிங் தோனி தான். அதன் பின்னர் தோனி பாகிஸ்தான் அணிக்கு எதிராக பட்டையை கிளப்பி தனது இடத்தை நிரூபித்தது எல்லாம் வேறு கதை. தோனிக்கு இந்த இடம் அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை. இந்திய அணியில் விக்கெட் கீப்பர் அல்லாத காலகட்டம் ரயில்வே அணிக்காக ஆடினார். அதன் பின்னர் பாகிஸ்தான் ஏ மற்றும் கென்யா ஏ அணிகளுக்கிடையே நடைபெற்ற முத்தரப்பு தொடரில் விளையாடி 2 சதம் ஒரு அரை சதம் 11 கேட்ச் என அனைத்தையும் செய்துதான் இந்திய அணிக்குள் வந்தார்.

Mohamed:

This website uses cookies.