இந்த அணியுடன் அதன் சொந்த மண்ணில் ஆடுவதில் சிக்கல் -உண்மையை போட்டு உடைத்த துணை கேப்டன்!

Photo by Arjun Singh / SPORTZPICS for BCCI

இந்த அணியுடன் அதன் சொந்த மண்ணில் ஆடுவதில் சிக்கல் -உண்மையை போட்டு உடைத்த துணை கேப்டன்!

நியூசிலாந்து அணியுடன் அதன் சொந்த மண்ணில் ஆடுவதில் சில சிக்கல்கள் இருப்பதாக இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.

இம்மாதம் இறுதி வாரத்தில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி ஐந்து டி–20 (ஜன. 24 முதல் பிப். 2 வரை) போட்டிகள், மூன்று ஒருநாள் (பிப். 5 முதல் 11வரை) போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் (பிப். 21 முதல் மார்ச் 4 வரை) போட்டிகள் என மொத்தம் 10 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

டெஸ்ட் போட்டிகள் வெலிங்டன், கிறைஸ்ட்சர்ச்சில் மைதானங்களில் நடக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்னமே தெரிவித்தது.

இதுகுறித்து இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரகானே பேசுகையில்,

“கடந்த 2014ல் நியூசிலாந்தில் இந்த இரு மைதானங்களில் இந்திய அணி விளையாடிய போது காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்தது. அச்சமயம் முன் அனுபவம் இல்லாததால் சற்று தடுமாறினோம். இதனால், தற்போது அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு விளையாடினால் சிறப்பாக செயல்படலாம்.

காற்றின் வேகம் கண்டித்து ஆடுவது நியூசிலாந்து மைதானங்களில் மிக முக்கியம். சிக்கலான ஒன்றும் கூட. நியூசிலாந்தை பொறுத்தவரையில் அதிகப்படியாக யோசித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. அடிப்படை விதிகளில் கவனம் செலுத்தினாலே போதுமானது.

பந்துகளை எதிர்கொள்ளும் போது, சூழ்நிலைக்கு ஏற்ப சந்திக்க வேண்டும். இங்குள்ள ஆடுகளங்களில் பந்தின் வேகமும், பவுன்சர்களும் இந்திய மைதானங்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டு இருக்கும்.

டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, நான் இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடுகிறேன். இது எனக்கு பெரும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். இது மைதானத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விரைவில் மாற்றிக் கொள்ள கைகொடுக்கும்.” என கூறினார்.

Prabhu Soundar:

This website uses cookies.