இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யூசுவேந்திர சஹால் தற்போது தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரையும் ஓரம்கட்டிவிட்டு தங்களது சிறப்பான பந்து வீசினால் அணியில் 2017 ம் ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து இடம் பிடித்து வந்த சுழல் பந்துவீச்சாளர் ஜோடியான சஹால் மற்றும் குல்தீப் இருவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரையும் ஓரம் கட்ட மிக முக்கிய காரணமாக அமைந்தது, அவர்கள் இருவரும் இந்திய மண்ணில் மட்டுமே சிறப்பாக செயல்பட முடிந்தது; வெளி கண்டங்களில் எதிர்பார்த்த அளவிற்கு அவரது செயல்பாடு சிறப்பாக இல்லை. ஆனால், இதனை சஹால் மற்றும் குல்தீப் ஜோடி இந்தியாவில் மட்டுமல்லாது; வெளி கண்டங்களிலும் குறிப்பாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய தொடர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.
குல்தீப் மற்றும் சஹால் இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் தோனி மிக முக்கிய பங்கு வகித்துள்ளார். ஸ்டம்பிங் குறித்த நேரத்தில் ஆலோசனை என அனைத்து விதமாகவும் உதவியுள்ளார். இந்நிலையில், தோனி உதவியது குறித்து சஹால் கருத்து தெரிவித்துள்ளார்.
சஹால் கூறுகையில், தோனி எங்களது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் உதவியுள்ளார். எது நடந்தாலும் உங்களுக்கு உதவியாக தோனி இருப்பார். நாங்கள் தவறாக செல்லும் ஒவ்வொரு முறையும், எங்களைத் திருத்த உடன் தோனி இருந்துள்ளார்.
மேலும், குல்திப் எனக்கு மிகச் சிறந்த ஜோடியாக அமைந்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நாங்கள் இருவரும் ஒன்றாக ஆடியுள்ளோம். இருவரும் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக ஒன்றாக ஆடி வருகிறோம். இது எங்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் உதவி வருகிறது. அதற்கும் மேல் ஒரு ஆசானாக எங்களை தோனி வழி நடத்தி வந்துள்ளார் என்றார்.