இவர்களுக்காக இந்த உலககோப்பையை வெல்வோம்: விராட் கோலி சூளுரை

நாட்டிற்காக பணியாற்றும் ராணுவ வீரர்களை எதனுடனும் ஒப்பிட முடியாது. அவர்களுக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில், இந்தியா முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இதற்கு மே 25-ந்தேதி நியூசிலாந்தையும், மே 28-ந்தேதி வங்காளதேசத்தையும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா எதிர்த்து விளையாடுகிறது.

உலகக்கோப்பைக்கான இந்திய அணி இன்று நள்ளிரவு மும்பை விமான நிலையத்தில் இங்கிலாந்து புறப்படுகிறது. இதற்கு முன் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோர் பேட்டியளித்தனர்.

அப்போது விராட் கோலி கூறுகையில் ‘‘நீங்கள் ஏராளமான வகைகளில் இருந்து உத்வேகத்தை பெறலாம். ஆனால், ஒரு விஷயத்தை இங்கு சுட்டிக்காட்டுவது மிகப்பெரியது. இந்திய ராணுவத்தை பற்றி பேசும்போது, அதைவிட சிறந்த உத்வேகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் இந்திய நாட்டிற்காக செய்த தியாகத்தைப் பற்றி பேசும்போது, அதனுடன் வேறு எதையும் ஒப்பிட இயலாது.

இதே உத்வேகத்துடன் நாம் சென்றால், ராணுவத்திற்காக ஏதாவது செய்ய முடியும். உயர்ந்த நிலை பேரார்வத்தை உங்களிடம் இருந்து வெளிப்படுவதை பார்க்கலாம். ஆனால், இதுவெல்லாம் ஏராளமான மற்ற காரணிகளையும் சார்ந்துள்ளது. உலகக்கோப்பையில் விளையாடும்போது ஒவ்வொரு வீரர்களுக்கு தனிப்பட்ட உத்வேகம் இருக்கும். ஒவ்வொருவரும் ராணுவத்தை மனதில் நினைத்தால், அதன்மூலம் கூடுதல் ஆற்றல் கிடைக்கும்’

எங்கள் தரநிலை மற்றும் பலங்களுக்கு ஏற்ப ஆடினால் முடிவுகளில் சரியான இடத்தில் இருப்போம். இதுதான் முக்கியமானது. இதுவரை பெற்ற வெற்றிகளும் அப்படித்தான்.

ஒவ்வொரு போட்டியிலுமே முழுத்திறனை வெளிப்படுத்த வேண்டும் ஏனெனில் இங்கு முதலில் பிரிவு வாரியாக மோதி பிறகு முன்னேறுவது என்பது கிடையாது. அனைவருக்கு எதிராகவும் ஆடவேண்டும். இது ஒரு நல்ல விஷயம்தான். இது வேறு ஒருசவால், அனைத்து அணிகளும் விரைவாக இதற்கு தங்களை தகவமைத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

எந்த ஒரு போட்டித் தொடருக்கும் முன்னால் போவது நல்லதுதான். உலகக்கோப்பை போன்ற தொடர்களில் முன்னமேயே இடத்துக்குச் செல்வது பதற்றத்தை தணிக்கும். இங்கிலாந்தில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் மற்ற இடங்களில் ஆடுவதிலிருந்து வேறுபாடு இல்லாதது, டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கு ஆடுவது முற்றிலும் வேறு ஒரு விஷயம். உலகக்கோப்பையில் அழுத்தம்தான் கையாள்வதற்கு மிக முக்கியக் காரணி சூழ்நிலைமைகள் அல்ல.

ஐபிஎல் கிரிக்கெட்டில் கூட அனைத்த் பவுலர்களும் வீசி வீசி களைப்படைந்து விடவில்லை.  முதற்படி அனைவரும் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். இதனை ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே தெரிவித்து விட்டோம்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

Sathish Kumar:

This website uses cookies.