இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு நியூஸிலாந்திற்கு வந்தால் தோனிக்கு வாய்ப்பளிக்க நாங்கள் தயார் என்று நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் மற்றும் முன்னாள் கேப்டன் தோனியை, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அவர்களது தற்போதைய கேப்டன் சர்பிராஸ் அஹ்மதுவை வைத்துக்கொண்டு தங்களுக்கு கொடுக்குமாறு கேட்டார். பின்னர் சங்கக்காரா ஓய்வு பெற்ற பிறகு, தங்களுக்கு தோனியை கொடுக்குமாறு அப்போது இலங்கை ரசிகர்களும் பரவலாக சமூகவலைத்தளங்களில் பேசிவந்தனர்.
இந்நிலையில், உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து 24 ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியநிலையில் தோனியும், ரவிந்திர ஜடேஜாவும் ஆடிய இன்னிங்ஸ் சிறப்புக்குறியது. தோனி 72 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தும், ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து அணி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
போட்டி முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார் கேன் வில்லியம்சன். அப்போது நிருபர் ஒருவர், தோனி நியூசிலாந்து வீரராக இருந்தால், ப்ளெயின் லெவனில் எடுப்பீர்களா? அவர் நியூசிலாந்தில் ஆடுவது குறித்து உங்கள் கருத்து என்ன? என கேட்டார்.
அதற்க்கு பதில் அளித்த வில்லியம்சன் கூறுகையில், ” நியூஸிலாந்து அணிக்கு சட்டரீதியாக தோனியால் இப்போது விளையாட முடியாது. ஒருவேளை தோனி, இந்தியாவின் குடியுரிமையை விட்டுவிட்டு, நியூஸிலாந்து குடிமகனாக மாறத் தயாராக இருக்கிறாரா. அவ்வாறு தோனி மாறினால், நாங்கள் தோனியை நிச்சயம் அணிக்குள் எடுப்போம்” எனத் தெரிவித்தார்.
.