2011 உலகக் கோப்பை வெற்றியை சச்சினுக்கு நாங்கள் பரிசாக வழங்கினோம் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான இந்தியா உலக சாம்பியன் ஆனது.
மயங்க் அகர்வாலுடனான பேட்டியில் விராட் கோலி கூறியதாவது:
உலகக் கோப்பையை வென்ற பிறகு நன்றியுணர்ச்சியினால் சச்சினை என் தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்தேன். எல்லோருடைய உணர்வுகளும் சச்சினைச் சுற்றி தான் இருந்தது.
இதற்கு முன்பு அவர் தொடர்ந்து நமக்கு வழங்கிக் கொண்டிருந்தார். இந்தத் தருணம் ஒரு பரிபூரண உணர்வைத் தந்து என்றார்.
தன் மனைவி அனுஷ்கா பற்றி கோலி, “என் வாழ்க்கையை நான் பரந்துப்பட்ட பார்வையில் பார்ப்பதற்கு முழுக் காரணமும் அனுஷ்காதான். அவருக்குத்தான் முழுப் பெருமையும் சேர வேண்டும். அவர் என் துணைவியாக இருப்பதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரராக, ஒரு மனிதராக எனது பொறுப்புகளைப் புரிய வைத்தவர் அவர். என்னைப் பின் தொடர்பவர்களுக்கு எப்படிப்பட்ட முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை அவர்தான் எனக்கு விளங்க வைத்தார். அனுஷ்காவிடமிருந்துதான் இவை அனைத்தையும் கற்றுக் கொண்டேன்” என்று சொல்லும் கோலி,
தொடர்ந்து, “அனுஷ்காவை நான் பார்க்காமல் போயிருந்தால், இப்படியெல்லாம் மாறியிருக்க மாட்டேன். ஏனென்றால் பொதுவாகவே நான் மிகவும் கறாரான, வெளிப்படைத்தன்மையற்ற மனிதன்தான். அதை அவர்தான் மாற்றினார். என் வாழ்க்கையும் அதனால் நன்றாக மாறியது” எனப் புகழாரம் சூட்டுகிறார்.
லாக்டவுன் சமயத்தில் அனுஷ்காவின் பிறந்தநாள் வந்தபோது, அவருக்காக முதன்முறையாக கேக் செய்து கொடுத்தகாவும் கோலி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் அதுவே, தன் வாழ்க்கையின் சிறந்த தருணம் என்கிறார் கோலி.வ்