3ஆவது போட்டி நடைபெரும் திருவனந்தபுரத்தில் மழை அச்சுருத்தல்

இந்தியா-நியூசிலானது இடயேயான மூன்றாவது மற்றும் தொடரைத் தீர்மாணிக்கும் போட்டி நாளை இரவு திருவனந்தபுரம் க்ரீன் ஃபீல்டு மைதானத்தில் நடபெறுகிறது.

இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். மேலும், சர்வதேச போட்டிகளை நடத்தும் இந்தியாவின் 50ஆவது மைதானமாகும்.

கிரீன் ஃபீல்டு மைதானம் ,திருவந்தபுரம்

மேலும், கடந்த சில நாட்களாக திருவனந்தபுரம் மற்றும் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மைதானம் கவர் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதனால் நாளைய போட்டி பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் மழை பெய்து தொடர் சம்னாக முடிந்தது.

 மூன்று ஒருநாள் போட்டிகள் முடிந்து அந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற வெற்றிக்கணக்கில் கோப்பையைக் கைப்பற்றியது.

அதே போல் இந்த போட்டியிலும் மழை பெய்தால் தொடர் சமனில் முடிவடையும். ஏற்கனவே மூன்று ஒருநாள் போட்டிகள் முடிந்து அந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற வெற்றிக்கணக்கில் கோப்பையைக் கைப்பற்றியது.

டி20 தொடரின் முதல் போட்டியை இந்தியாவும் இரண்டாவது போட்டியை நியூசிலாந்து அணியும் வென்றுள்ளது. மூன்றாவது போட்டி நடைபெறும் பட்சத்தில் இரு அணிகளும் ஒருநாள் போட்டியின் இருதிப் போட்டியைப் போல ஒரு த்ரில் போட்டியாக அமையும்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்து 20 ஓவர் தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது போல 20 ஓவர் தொடரையும் வெல்லும் வேட்கையில் உள்ளது.

இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெல்விசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், தினேஷ் கார்த்திக், டோனி, ஹர்த்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே, புவனேஷ்வர் குமார், அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், பும்ரா, யசுவேந்திர சஹால், ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், முகமது சிராஜ் .

நியூசிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), குப்தில், முன்ரோ, டெய்லர், டாம் லாதம், கிராண்ட் ஹோம், நிக்கோலஸ், போல்ட், மிலின், சவுத்தி, சான்ட்னெர், பிலிப்ஸ் மேட் ஹென்றி, சோதி, டாம் புரூஸ்.

Editor:

This website uses cookies.