இங்கிலாந்து அயர்லாந்து செல்லும் முன்பு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் விராத் கோலி இருவருக்கும் டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் பேட்டியளித்த விராத் கோலி எங்களுக்கு இது போன்ற போட்டிகளை எதிர்கொள்ள முனைப்புடன் உள்ளோம். கடினமான போட்டிகளுக்கு எங்களை தயார் படுத்தி உள்ளோம் என கூறினார்.
ஜூலை மாதம் முதல் தொடங்க இருக்கும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் ஒரு கட்டமாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின் அவர்களுக்கு பெங்களுருவில் யோயோ உடற்தகுதி டெஸ்ட் நடத்தப்பட்டு அதன்mமூலம் சில வீரர்கள் நீக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு பதிலாக தகுதி பெற்றவர்கள் அணியில் இடம் பெற்றனர். குறிப்பாக, முஹம்மது சமி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நவதீப் சைனி சேர்க்கப்பட்டார்.
அதன் பின், அம்பத்தி ராயுடு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இரண்டு வருடங்களுக்கு பிறகு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் மீண்டும் அணியில் இடம் பெற்றார். ஆனால் யோயோ பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 16.1 மதிப்பெண்ணை பெறாததால் நீக்கப்பட்டார். தற்போது இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு வீரர்கள் இங்கிலாந்து செல்லும் முன்பாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் இந்திய அணி கேப்டன் விராத் கோலி இருவரும் டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்தனர்.
இதில் அவர்கள் கூறியதாவது, நாங்கள் 100 சதவீதம் முழு உடல் தகுதியுடன் இருக்கிறோம். புஜாரா இஷாந்த் சர்மா போல நானும் இங்கிலாந்து மைதானத்தில் எனது முழு திறமையும் காட்ட தயாராக உள்ளேன். உடற்தகுதி பயிற்சி எங்களை சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும். இதை கட்டாய படுத்திய பிசிசிஐ க்கு நன்றி என கூறினார்.
2014ம் ஆண்டு போல் இந்தமுறை கண்டிப்பாக இருக்காது என கூறினார். அப்பொழுது இந்திய அணி 1-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இதற்க்கு முன் தோனி தலைமையிலான இந்திய அணி இருமுறை இங்கிலாந்து சென்றது ஆனால் இருமுறையும் இந்திய அணி தோல்வியுற்றது. இது போல் இம்முறை தொடராது என தெரிவித்தார். தென்னாபிரிக்கா இலங்கை இரு அணியுடனும் இருந்த அதே யுக்தியை தான் பயன்படுத்த உள்ளோம். அதில் எந்தஒரு மாற்றமும் இல்லை எனவும் கூறினார். பல கடினமான போட்டிகளையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் எனவும் கூறினார்.