ரோவ்மன் பவல் கேப்டன்… அணிக்கு திரும்பும் அதிரடி வீரர்கள்; டி.20 தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு !!

ரோவ்மன் பவல் கேப்டன்… அணிக்கு திரும்பும் அதிரடி வீரர்கள்; டி.20 தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு

இந்திய அணியுடனான டி.20 தொடருக்கான விண்டீஸ் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி 1ம் தேதி நடைபெற உள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டி 3ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியுடனான டி.20 தொடருக்கான விண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் விண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த சாய் ஹோப்பிற்கு டி.20 தொடரிலும் இடம் கிடைத்துள்ளது. ரோவ்மன் பவல் தலைமையிலான விண்டீஸ் அணியில் கெய்ல் மெயர்ஸ், சிம்ரன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்ட, அல்ஜாரி ஜோசப், நிக்கோலஸ் பூரண, ஓடியன் ஸ்மித், ஓசோன் தாமஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியுடனான டி.20 தொடருக்கான விண்டீஸ் அணி;

ரோவ்மன் பவல் (கேப்டன்), கெய்ல் மெயர்ஸ் (துணை கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ராஸ்டன் சேஸ், சிம்ரன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், சாய் ஹோப், அகெல் ஹூசைன், அல்ஜாரி ஜோசப், பிராண்டன் கிங், ஓபட் மெக்காய், நிக்கோலஸ் பூரண், ரோமாரியோ செஃபர்ட், ஓடியன் ஸ்மித், ஓசோன் தாமஸ்.

Mohamed:

This website uses cookies.