வெளுத்து வாங்கிய கிரிஸ் கெய்ல்… மீண்டும் மரண அடி வாங்கிய ஆஸ்திரேலியா !!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் விண்டீஸ் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் விண்டீஸ் அணி அசத்தல் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.

டேரன் ஷமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான வேட் 23 ரன்களும், ஆரோன் பின்ச் 30 ரன்களும் எடுத்து கொடுத்தனர். இதன்பின் களத்திற்கு வந்த ஹென்ரிக்ஸை (33) தவிர மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்த் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான பிளட்சர் (4) மற்றும் சிம்மன்ஸ் (15) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தாலும், மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கிரிஸ் கெய்ல் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சிதறடித்து 38 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 14.2 ஓவரிலேயே இலக்கை அசால்டாக எட்டிய விண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடரையும் விண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Mohamed:

This website uses cookies.