கார் விபத்தில் சிக்கிய முக்கிய வீரர்; சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் !!

கார் விபத்தில் சிக்கிய முக்கிய வீரர்; சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஒஷேன் தாமஸ் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் ஒஷேன் தாமஸ். 23 வயதான இளம் வீரரான அவர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 20 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் ஆடி முறையே, 27 மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடைசியாக அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆடிய ஒஷேன் தாமஸ், இலங்கைக்கு எதிரான தொடரில் அணியில் இடம்பெறவில்லை.

West Indies’ Oshane Thomas celebrates the dismissal of India’s Shikhar Dhawan during the fifth and last one-day international cricket match between India and West Indies in Thiruvananthapuram, India, Thursday, Nov. 1, 2018. (AP Photo/Aijaz Rahi)

 

இந்நிலையில், ஜமைக்காவில் ஹைவேஸ் 2000ல் தனது “AUDI” காரில் சென்று கொண்டிருந்த ஒஷேன் தாமஸ், மற்றொரு காரின் மீது அவரது கார் மோதிய கோர விபத்தில் சிக்கினார். காரை ஒஷேன் தாமஸே ஓட்டிச்சென்றுள்ளார். இந்த விபத்தில் தாமஸின் கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதையடுத்து விபத்தில் சிக்கிய தாமஸ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து நடந்த பிறகு, தாமஸ் நினைவாற்றலுடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mohamed:

This website uses cookies.