பொல்லார்ட், பிராவோ, ஹோல்டர் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி ! பங்களாதேஸூடன் சுற்றுப்பயணத்திற்கு தயாராகிறது !

ஹோல்டர், பொல்லார்ட், பிராவோ இல்லாத  வெஸ்ட் இண்டீஸ் அணி ! பங்களாதேஸூடன் சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வெஸ்ட் இண்டீஸ் !

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது விளையாடி முடித்துள்ளது. இதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது . இதற்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் ஜனவரி 15ஆம் தேதி பங்களாதேஷ் சுற்றுப்பயணத் தொடர் தொடங்குகிறது. சட்டோகிராம் மற்றும் டாக்கா மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி தனது ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான அணியை வெளியிட்டு இருக்கிறது.   இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்கள் யாரும் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பங்களாதேஷ் அணியுடனான இந்த இரண்டு டெஸ்ட் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணி பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் போட்டி ஐசிசி உலக கோப்பை சூப்பர் லீக் தொடருக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுதும். இது ஐசிசி உலக கோப்பை 2023 நேரடியாக தகுதி பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.  

இந்நிலையில், ஜேசன் ஹோல்டர், கீரோன் பொல்லார்ட், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் கோட்ரெல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப், சிம்ரான் ஹெட்மியர் மற்றும் நிக்கோலஸ் பூரன் போன்றவர்கள் கோவிட் -19 காரணமாக பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில்  கலந்து கொள்ள மறுத்துவிட்டனர். ஃபேபியன் ஆலன் மற்றும் ஷேன் டோவ்ரிச் தனிப்பட்ட காரணங்களால் அணியில் இடம்பெற வில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலக கோப்பை சூப்பர் லீக் தொடருக்கு வாய்ப்பாக இருக்கும் இந்த பங்களாதேச சுற்றுப்பயணத்தில் முக்கிய வீரர்கள் பங்கு பெறாதது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மாபெரும் இழப்பு.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி:

கிரெய்க் பிராத்வைட் (இ), ஜெர்மைன் பிளாக்வுட் (துணை கேப்டன்), நக்ருமா பொன்னர், ஜான் காம்ப்பெல், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டி சில்வா, ஷானன் கேப்ரியல், கவேம் ஹாட்ஜ், அல்சாரி ஜோசப், கைல் மேயர்ஸ், ஷெய்ன் மோஸ்லி, வீரசாமி பெர்மால், ரேமண்ட் ரீஃபர் , ஜோமல் வாரிகன்.

வெஸ்ட் இண்டீஸ்  ஒருநாள் அணி:

ஜேசன் முகமது (இ), சுனில் அம்ப்ரிஸ் (துணை கேப்டன்), நக்ருமா பொன்னர், ஜோசுவா டி சில்வா, ஜஹ்மர் ஹாமில்டன், செமர் ஹோல்டர், அகீல் ஹொசைன், அல்சாரி ஜோசப், கைல் மேயர்ஸ், ஆண்ட்ரே மெக்கார்த்தி, ஜார்ன் ஓட்லி, ரோவ்மன் பவல், ரேமண்ட் ரீஃபர், ரொமாரியோ ஷெப்பர்ட் , ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

Prabhu Soundar:

This website uses cookies.