மாஸ்.. பக்கா மாஸ்… இரண்டு தரமான பேட்ஸ்மேன்களுக்கு இந்திய அணியில் இடம்; முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது வெஸ்ட் இண்டீஸ் !!

மாஸ்.. பக்கா மாஸ்… இரண்டு தரமான பேட்ஸ்மேன்களுக்கு இந்திய அணியில் இடம்; முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது வெஸ்ட் இண்டீஸ்

இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள விண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

 

இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (12-7-23) துவங்கியுள்ளது. இதில் டாஸ் வென்றுள்ள விண்டீஸ் அணியின் கேப்டனான பிராத்வொய்ட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷன் மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். இதனால் கே.எஸ் பாரத் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், அதே போல் சுப்மன் கில் மூன்றாவது வீரராக களமிறங்க உள்ளார்.

இது தவிர ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், ஷர்துல் தாகூர், ஜெயதேவ் உனாத்கட் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் விண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

பிராத்வொய்ட் தலைமையிலான விண்டீஸ் அணியில், பிலாக்வுட், தகென்ரைன் சந்தர்பால், கார்ன்வால், ஜோசப், கைமர் ரோச் மற்றும் ஜோமல் வாரிக்கன் ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான விண்டீஸ் அணியின் ஆடும் லெவன்;

கிராக் பிராத்வொட், சந்தர்பால், ரய்மான் ரீஃபர், ஜெராமைன் பிலாக்வுட், அலிக் அதான்சே, ஜோசுவா டி சில்வா, ஜேசன் ஹோல்டர், ரக்கீம் கார்னல், அல்ஜாரி ஜோசப், கீமர் ரோச், ஜோமல் வாரிகன்.

இந்திய அணியின் ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, அஜின்கியா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திர அஸ்வின், ஷர்துல் தாகூர், ஜெயதேவ் உனாத்கட், முகமது சிராஜ்.

Mohamed:

This website uses cookies.