.எல் ராகுலுக்கு இடம் இல்லை; வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா
விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலில் போட்டி்் இன்று நடைபெறுகிறது.
கயானாவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல் ராகுலுக்கு இடம் கிடைக்கவில்லை, அவருகு பதிலாக ஸ்ரேயஸ் ஐயருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. அதே போல் கலீல் அஹமது, ஜடேஜா, ஷமி, குல்தீப் யாதவ் போன்ற வீரர்களும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ்,ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல் அஹமது, புவனேஷ்வர் குமார்.
விண்டீஸ் அணி;
ஈவின் லீவிஸ், கிரிஸ் கெய்ல், ஷாய் ஹொப், நிக்கோலஸ் பூரான், சிம்ரன் ஹெய்ட்மர், ராஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், கார்லஸ் பிராத்வொய்ட், ஃபேபியன் ஆலன், செல்டன் கார்டல், கீமர் ரோச்