போட்டி போட்டு விண்டீஸ் அணியின் பந்துவீச்சை பொளந்து கட்டிய இந்திய வீரர்கள்; 351 ரன்கள் குவித்தது இந்திய அணி
விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் 85 ரன்களும், இஷான் கிஷன் 77 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன்பின் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 51 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத கேப்டன் ஹர்திக் பாண்டியா 52 பந்துகளில் 70 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 35 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 351 ரன்கள் குவித்துள்ளது.
விண்டீஸ் அணி சார்பில் அதிகபட்சமாக செஃபர்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் அல்ஜாரி ஜோசப், யானிக் சாரியாக் மோட்டி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.