பந்துவீச்சில் கச்சிதகமாக செயல்பட்ட இந்திய வீரர்கள்… 159 ரன்கள் குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி !!

பந்துவீச்சில் கச்சிதகமாக செயல்பட்ட இந்திய வீரர்கள்… 159 ரன்கள் குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் விண்டீஸ் அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி கயானா மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த விண்டீஸ் அணிக்கு, கெய்ல் மெயர்ஸ் 25 ரன்களும், பிராண்டன் கிங் 45 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.

மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சார்லஸ் 12 ரன்களிலும், கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரண் இந்த போட்டியில் 20 ரன்களிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

அடுத்ததாக களத்திற்கு வந்த சிம்ரன் ஹெட்மயர் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், விண்டீஸ் அணியின் கேப்டனான ரோவ்மன் பவல் கடைசி பந்து வரை களத்தில் இருந்து  விண்டீஸ் அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து 19 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரிகளுடன் 40* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள விண்டீஸ் அணி 159 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் அக்‌ஷர் பட்டேல் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.