வேகப்பந்து வீச்சாளர்கள் மீது ஏன் இந்த பாரபட்சம்? கோலிக்கு ஆட்டநாயகன் விருது கொடுத்தது குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் கடும் அதிருப்தி!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோலிக்கு ஆட்டநாயகன் விருது சென்றது இதனால் ட்விட்டர்கள் ட்விட்டரில் ரசிகர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் மீது ஏனிந்த பாரபட்சம் என்ற கேள்வியை எழுப்பி கடுமையாக சாடியுள்ளனர்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் 34 ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளும் மோதின இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.

ரோஹித் சர்மா சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 48 ரன்களும், கோலி 72 ரன்களும், கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 56 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 268 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்கம் முதலே சரிவு தொடங்கியது. கிறிஸ் கெயில் 6 ரன்களும் சாய் ஹோப் 5 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

நிக்கோலஸ் பூரான் 28 ரன்களும் ஹோல்டர் 6 ரன்களும் எடுத்து வெளியேற வெஸ்ட் இண்டீஸ் மேலும் தடுமாறியது. நிலைத்து ஆடிய அம்பரிஸ் 31 ரன்களுக்கு வெளியேற பெரும் பின்னடைவாக அமைந்தது. ப்ராத்வெய்ட் 1 ரன்னிலும், ஹெட்மாயர் 18 ரன்னிலும் ஆட்டமிழக்க வெற்றி இந்திய அணிக்கு உறுதியானது.

34.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனால் 125 ரன்கள் என்ற மிகப் பெரிய வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட முகமது சமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் இதன்மூலம் உலக கோப்பையில் மூன்று முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். முகமது சமி பந்துவீசி கிறிஸ் கெயில், சாய் ஹோப் மற்றும் ஹேட்மயர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணிக்கு வெற்றியை உறுதி செய்தது.

இதனால் இவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 72 ரன்கள் அடித்த விராத் கோலி ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. இது ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதனால் ட்விட்டரில் ரசிகர்கள், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பாரபட்சம் காட்டி வருகின்றார்களா? என்ற கேள்வியை எழுப்பி கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

 

Prabhu Soundar:

This website uses cookies.