‘டே-நைட் டெஸ்ட்’ போட்டிக்கு விராட் கோலியின் பதில் என்ன? – கங்குலி வெளியிட்ட திடுக் தகவல்!

வங்கதேச அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி என்ன பதிலளித்தார் என கங்குலி பேட்டியின்போது உண்மையை வெளியிட்டுள்ளார்.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருக்கிறது. இதில் முதல் டி20 போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

டி20 போட்டிகள் முடிவு பெற்றவுடன் நடைபெறவிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில், கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வந்தது. பின்னர் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பகலிரவு டெஸ்ட் போட்டியை உறுதி செய்வதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடமும், தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இடமும் பிசிசிஐ தலைவர் கங்குலி ஆலோசனை நடத்தினார். அப்போது பகலிரவு டெஸ்ட் போட்டி பற்றி கூறியதற்கு விராட் கோலி என்ன பதில் அளித்தார் என்பதை கங்குலி வெளியிட்டுள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், நான் விராத் கோலியிடம் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து வினவினேன். அதற்கு மூன்று வினாடிகள் மட்டுமே யோசித்த விராட் கோலி பளாரென்று ஓகே சொல்லிவிட்டார். அவர் முகத்தில் இருந்த அளப்பரியா மகிழ்ச்சியை நான் கண்டேன். கிரிக்கெட் உலகில் வித்தியாசமான சவால்களை எதிர்கொள்ள அவர் எந்நேரமும் காத்திருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். இத்தகைய கேப்டன் இந்திய அணியில் இருப்பதால்தான் அடுத்தடுத்து வெற்றிகளை மூன்றுவித போட்டிகளிலும் இந்திய அணி குவித்து வருகிறது என நம்புகிறேன் என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.