தல தோனியை அப்படியே பின்பற்றும் சிஷ்யன் ருத்துராஜ்… இளம் வீரர் வெளியிட்ட தகவல் !!

தல தோனியை அப்படியே பின்பற்றும் சிஷ்யன் ருத்துராஜ்… இளம் வீரர் வெளியிட்ட தகவல்

தோனி எங்களிடம் பேசியது ருத்ராஜ் கெய்க்வாட் பேசியது போன்று இருந்தது என மகாராஷ்டிரா அணியின் வீரர் அசீம் காசி தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விஜய் ஹசாரே போட்டியில் அதிரடியாக செயல்பட்டு கொண்டு வரும் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் காலிறுதிப் போட்டியில் உத்தர பிரதேஷ் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி 220 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் மீண்டும் ஒரு முறை பேசு பொருளாக திகழ்ந்துள்ளார்.

 

2021 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெயரை பெற்ற ருத்ராஜ் கெய்க்வாட் எதிர்கால இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுப்பார் என்று அனைவராலும் பாராட்டப்பட்டார். இதன் காரணமாக இவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் இவர் சர்வதேச இந்திய அணிக்காக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

இதனால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்து தவித்தார். இருந்த போதும் விடா முயற்சி மற்றும் கடின பயிற்சியால் உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்ராஜ், தற்பொழுது விஜய் ஹசாரே போட்டியில் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு அணியை வழி நடத்தி வருகிறார்.

ருத்ராஜ் கெய்க்வாட்டின் சிறப்பான பேட்டிங் மற்றும் அணியை வழிநடத்திய விதம் என இரண்டும் சென்னை சூப்பர் கிங்ஸில், அவர் தோனியிடமிருந்து கற்றுக் கொண்டார் என அனைவராலும் பாராட்டப்பட்டார்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா அணியின் சக வீரரான அசீம் காசி, தோனி பேசியது எங்களுக்கு ருத்ராஜ் கெய்க்வாட் பேசியது போன்று இருந்தது என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசீம் காசி தெரிவித்ததாவது, தோனி எங்களுடைய பயிற்சி முகாமிற்கு வருகை தந்து எங்களுடன் உரையாடினார். “அப்பொழுது தோனி எங்களிடம் பேசியது அப்படியே ருத்ராஜ் கெய்க்வாட் பேசியது போன்றே இருந்தது, ருத்ராஜ் கெய்க்வாட் எங்களிடம் என்ன பேசுவாரோ அதேதான் தோனி எங்களிடம் பேசினார், ருத்ராஜ் கெய்க்வாட் சென்னை அணியில் விளையாடிய நாள் முதல் அவரால் எளிதாக தோனியிடம் பேசி விட முடியும், இதனால் தோனியின் கருத்தை ருத்ராஜ் கெய்க்வாட் எங்களிடம் அப்படியே தெரிவிப்பார். இதனால் எங்கள் அனைவருக்கும் தோனி அணியை எப்படி வழிநடத்துவார் என்பது நன்றாகவே தெரியும். அப்படி தான் ருத்ராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிரா அணியை வழிநடத்தி வருகிறார்” என அசீம் காசி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.