ஆடுகளத்தில் எப்படி அபிரிவிதமான நிலைமை இருந்து வந்தாலும் கூலாக இருந்து அணியை கரை சேர்க்கும் வல்லமை படைத்தவர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. ஆட்டத்தின் மீது இவருடைய அந்த கூலான அனுகுமுறை இவருக்கு பலமுறை கைகொடுத்து சரித்திரம் படைத்திருக்கிறது.
பல முறை இவர் செய்யும் வித்யாசமான மூவ்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது. 2007ன் டி20 உலகக்கோப்பையில் கடைசி ஒவரில் 11 ரன் தேவை என இருந்து போது ஹர்பஜன் சிங் போன்ற அனுபவம் வாய்ந்த வீரருக்கு ஓவர் இருந்த போதும், அந்த உலகக்கோப்பையில் மிகவும் அனுபவம் குறைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜொஹிந்தர் சர்மாவிற்கு பந்தை கொடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார் தோனி.
இது போன்ற இவரது பல மூவ்கள் பல கைவிட்டுப் போன தொடர்களைக்கூட வென்றெடுத்திருக்கிறார் கேப்டனாக இருந்த தோனி. அதே போல் தான் அவருடைய பேட்டிங்கிலும் புகழ் பெற்றவர். இந்திய அணியின் 5 விக்கெட் விழுந்தாலும் அணியின் நம்பிக்கை தூணாக இருந்து பேட்ஸ்மேனாகவும் வெற்றியைத் தேடித்தந்திருக்கிறார் தோனி.
அதே போல் தான், 2011 உலகக்கோப்பையிலும் தனது பேட்டிங் மற்றும் கேப்டன்சிப்பின் வித்யாசமான அனுகுமுறையால் இறுதிப் போட்டியில் கடைசியாக வின்னிங் ஷாட்டாக ரிக்சர் அடித்து 28 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை பெற்றுக்கொடுத்தார் கேப்டன் தோனி.
அந்த இறுதிப் போட்டியிலும் கூலாக தனது பேட்டிங்கை காட்டி 274 ரன்னை கம்பிருடன் சேர்ந்து அடித்து இந்தியாவின் 28 வருட கனவை நிறைவேற்றினார். 274 ரன் அடிக்க வேண்டிய நேரத்தில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் சச்சின் மற்றும் சேவாக் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
அடுத்தாக வந்த கம்பிர் மற்றும் கோலி இருவரும் அணியை கரை சேர்க்கும் துவக்கத்தில் ஈடுபட ஒரு கட்டத்தில் கோலி வெளியேறினார். பின்னர் யுவ்ராஜ் சிங்கின் இடத்தில் தோனி புதிதாக ஒரு மூவ் செய்து இறங்கினார். அப்படியாக பொருமையாக 91 ரன் அடித்து இந்திய அணி 271 ரன்னை கடந்து உலகக்கோப்பை வெல்ல உதவினார் தோனி.
போட்டி முடிந்த பின் இந்திய வீரர்கள் ஒருவர் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைப் பற்றி இந்தியா டுடே ஊடத்தில் தலைவர் ராஜ்தீப் சர்தேசாய் ‘டொமாக்ரடிக் XI’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
போட்டி முடிந்த பின்னர், ஹர்பஜன் சிங் தோனியை கட்டத் தழுவிய போது, தோனி கண்களில் கண்ணீரே வந்து விட்டது, இதனை ஊடகங்கள் கவர் செய்ய மறந்துவிட்டன.
என அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இதனைப் பற்றி தோனி அந்த புத்தகத்தில் கூறியதாவது,
‘ஆம் நான் அழுதுவிட்டேன், கேமராக்கள் அதனை பதிவிடவில்லை. எனக்கு தானாகவே கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. ஆனால், அதனை கட்டுப்படுத்தி வைத்திருந்தேன். ஹர்பஜன் சிங் என்னைக் கட்டிபிடித்ததும் அந்த கண்ணீர் வெளியே வந்துவிட்டது.
எனக் கூறியிருக்கிறார் தோனி