பேர், புகழுக்காக விளையாடாமல் தயவு செஞ்சு நாட்டுக்காக விளையாடுங்கடா… தடாலடியாக பேசிய தல தோனி !!

பேர், புகழுக்காக விளையாடாமல் தயவு செஞ்சு நாட்டுக்காக விளையாடுங்கடா… தடாலடியாக பேசிய தல தோனி

நான் கிரிக்கெட் விளையாடுபவர்கள் மத்தியில் அதிகம் பேசுவது இதைப்பற்றி தான் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 2007 டி.20உலக கோப்பை, 2011 ஒரு நாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன் டிராபி போன்ற icc கோப்பைகளை வென்று குவித்த இந்திய அணியின் மகத்தான கேப்டன் மகேந்திர சிங் தோனி, தற்பொழுது ஐபிஎல் தொடரில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார்.

குறிப்பாக தோனி எதிர்வரும் 2023 தொடரோடு தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எப்பொழுதாவது செய்தியாளர்கள் சந்திப்பிற்கு பேட்டியளிக்கும் மகேந்திர சிங் தோனி, நேற்று யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.அதில் தான் கிரிக்கெட் வீரர்களுக்கு என்ன அறிவுரை கூறுவேன் என்றும் தற்பொழுது உள்ள கிரிக்கெட்டர்கள் எப்படி செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து தோனி பேசுகையில்,“நான் கிரிக்கெட் வீரர்களை சந்தித்தால் அவர்களிடம் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து அதிகம் பேசுவேன், நம்மளை பொருத்தவரையில் கிரிக்கெட் மிகவும் முக்கியமானது, கிரிக்கெட்டை சுற்றி இருக்கும் அனைத்தும் தன்னைத்தானே நன்றாக பார்த்துக் கொள்ளும்.ஆனால் அதற்கு நாம் கிரிக்கெட்டை முக்கியத்துவம் கொடுத்து கவனித்துக் கொள்ள வேண்டும்.

நான் 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்தேன், அப்போது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் என எதுவும் கிடையாது. ஆனால் தற்போதைய உலகில் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் லைக்கிர்க்காகவும், பாலோவிற்காகவும் வருத்தப்படுகின்றனர். ஆனால் அது ஒரு விஷயமே கிடையாது, ஒரு கிரிக்கெட் வீரராக நாம் நம்முடைய நாட்டிற்காக பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும் நாம் அதை செய்தாலே,பாலோ மற்றும் லைக் தானாக வரும், இதனால் இந்த இரண்டிற்கான வித்தியாசத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்” என கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு மகேந்திர சிங் தோனி அறிவுரை வழங்கியுள்ளார்.

Mohamed:

This website uses cookies.