அட நம்ம சச்சினுக்கு இப்படி ஒரு பழக்கமா..? உண்மையை உடைத்த கங்குலி !!

அட நம்ம சச்சினுக்கு இப்படி ஒரு பழக்கமா..? உண்மையை உடைத்த கங்குலி

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் சவுரவ் கங்குலியும் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இவர்களின் பார்ட்னர்ஷிப் அபாரமானது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் இப்போதும் தொடர்கிறது இவர்களின் நட்பு. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சச்சின் பற்றிய பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறும்போது, ’14 வயதிலேயே சச்சினை தெரியும். நீண்ட தலைமுடியுடன் தான் அவரை முதன் முதலாகப் பார்த்தேன். இங்கிலாந்தில் ஒரு போட்டிக்கு சென்றிருந்த போது, எனது அறை நண்பராக இருந்தார் சச்சின். ஒரு நாள் இரவில் திடீரென்று எழுந்து பார்த்தபோது சச்சின் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். பாத்ரூம் செல்வாராக இருக்கும் என்று நினைத்து மறுபக்கமாக படுத்துத் தூங்கிவிட்டேன். மறுநாள் அவரிடம் இதுபற்றி எதுவும் கேட்கவில்லை. இரண்டாவது நாளும் அவர் அப்படியே இரவில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்.

பின்னர் சேரில் போய் உட்கார்ந்தார். எனக்கு பயமாகிவிட்டது. நேரத்தைப் பார்த்தால் இரவு 1.30. உடனடியாக எழுந்து உட்கார்ந்து யோசித்தேன். ‘இந்த நேரத்தில் இவர் என்ன செய்கிறார்?’ என்று. பிறகு சிறிது நேரத்தில் அங்கும் இங்கும் நடந்துவிட்டு, என் அருகில் வந்து படுத்துத் தூங்கினார்.

மறுநாள் அவரிடம் கேட்டேன், ‘எனக்கு பயமா இருக்கு. ராத்திரி போல என்ன பண்றீங்க?’ என்று. ‘நான் தூங்கிக்கொண்டே நடக்கிறேன்’ என்று கூலாகச் சொன்னார். அவருக்குத் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கிறது என புரிந்துகொண்டேன். அப்போது அவரிடம் அந்தப் பழக்கம் இருந்தது’ என்றார்.

Mohamed:

This website uses cookies.