21ம் நூற்றாண்டில் பிறந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் முதல் கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் சர்வதேச அளவில் இலங்கை அணிக்கு எதிராக 2-வது டி20 போட்டியில் படிக்கல் பங்கு பெற்று விளையாடினார். ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக பங்களித்து வரும் அவருக்கு இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பு வந்தது.
ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி விளையாடாத அவர் தற்பொழுது இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் விளையாடி உள்ளார். 2வது டி20 போட்டியில் 23 பந்துகளில் 79 ரன்களும் மூன்றாவது டி20 போட்டியில் 15 பந்துகளில் 9 ரன்களும் அவர் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் இந்திய அணியில் நிச்சயமாக வருங்காலத்தில் விளையாடுவார் என்றும், ஷிகார் தவான் இடத்தில் அவர் விளையாடி அவரது இடத்தை இவர் பூர்த்தி செய்வார் என்றும் சமீபத்தில் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
ஷிகர் தவான் இடத்தை படுக்கல் பூர்த்தி செய்வார்
அவரை நான் ஐபிஎல் தொடரில் இருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். நல்ல அதிரடியாக விளையாடும் இடதுகை ஆட்டக்காரர் ஆக அவர் தன்னை மேம்படுத்தி உள்ளார். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் அவர் சதம் அடித்து பெரிய நம்பிக்கையை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியிருக்கிறார். உள்ளூர் போட்டிகளிலும் அவரது ஆட்டம் மிக அற்புதமாக இருக்கிறது. மிக இளம் வயதிலேயே இவ்வளவு பெரிய நம்பிக்கையை நம் மீது அவர் சுமத்தியிருக்கிறார்.
நிச்சயமாக ஷிகர் தவான் இடத்தை அவர் பூர்த்தி செய்வார். அவரது இடத்தில் வருங்காலத்தில் எந்த வீரர் விளையாடுவார் என்று தற்போது கேட்டால் அது நிச்சயமாக இவர் ஆக மட்டுமே இருக்கும். நல்ல அதிரடியாக விளையாடும் இவர் நிச்சயமாக வருங்காலத்தில் இந்திய அணிக்கு ஓபனிங் வீரராக களமிறங்கி விளையாடுவார் என்று சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
மேலும் பேசிய சேவாக் இளம் வீரர்கள் இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் வாய்ப்பினை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவர்களுக்கு விளையாடும் வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அங்கு இவர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து நல்ல பெயர் எடுத்து கொள்ள வேண்டும்.
வருங்காலத்தில் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ச்சியாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படி வெளிப்படுத்தினால் மட்டுமே நீண்டகாலம் இந்திய அணியில் நீடித்து விளையாட முடியும் என்றும் விரேந்திர சேவாக் அறிவுரை கூறியுள்ளார்.