இவுங்க அப்படி என்னடா தப்பு செஞ்சாங்க..? திறமை இருந்தும் காரணமே இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட மூன்று முக்கியமான வீரர்கள் !!

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse
இவுங்க அப்படி என்னடா தப்பு செஞ்சாங்க..? திறமை இருந்தும் காரணமே இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட மூன்று முக்கியமான வீரர்கள்

விண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து காரணமே இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

அடுத்த சில தினங்களில் வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இரு அணிகள் இடையேயான இந்த தொடர் ஜூலை 12ம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், ஜெய்ஸ்வால், ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக், முகமது சிராஜ் போன்ற வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் பல திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், திறமை இருந்தும் காரணமே இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட மூன்று முக்கியமான வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

ஷிகர் தவான்;

எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவானின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றே பலரும் நம்பி வந்தனர். ஆனால் சுப்மன் கில்லின் வருகையால் ஷிகர் தவான், திடீரென இந்திய அணியில் இருந்து ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டார். கிட்டத்தட்ட கடந்த 5 வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி அதில் குறையே சொல்ல முடியாத அளவிற்கும் செயல்பட்டு வரும் ஷிகர் தவான் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டிருப்பது தவறு என கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் பேசி வருகின்றனர். ஷிகர் தவான் போன்ற அனுபவ வீரரின் தேவை உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் இந்திய அணிக்கு தேவையுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Mohamed:

This website uses cookies.