டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் யார் சிறந்த வீரர் என கணிக்க இயலாது என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது..
.இது போன்ற கேள்விகள் மிகவும் கடினமான காரியம். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் எப்போதும் இந்தியாவிற்காக போட்டிகளை செல்லும் வீரர்கள். ரோகித் சர்மா திறமை வாய்ந்தவர். மறுபக்கம் பார்த்தால் கோலி கடினமாக உழைக்கும் வீரர். விராட் கோலி ரோகித்தைப்போல் திறமை வாய்ந்தவராக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவருக்கு இந்த ஆட்டம் மிகவும் பிடிக்குமே. அதுதான் அவரை இங்கு அழைத்து சென்றுள்ளது. இதனால் யார் சிறந்தவர் என்பதை கணிக்க இயலாது. முடிவாக இருவருமே இந்தியாவிற்காக போட்டிகளை வென்று வருகின்றனர் அதுவே முக்கியம் என்று கூறினார் அவர்.
நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அதிரடி அரைசதம் விளாசி இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற கேப்டன் ரோஹித் சர்மா, புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இன்று அவர் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இந்த இன்னிங்சின் போது டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பாக நம்பர் 1 இடத்தில் இருந்த மார்டின் கப்தில் ரன்களை ரோஹித் சர்மா இன்று கடந்து நம்பர் 1 இடத்துக்குச் சென்றுள்ளார்.
92 டி20 சர்வதேச போட்டிகளில் 84 இன்னிங்ஸ்களில் 2,288 ரன்களை எடுத்து அதிக டி20 ரன்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார், மார்டின் கப்தில் 76 போட்டிகளில் 74 இன்னிங்ஸ்களில் 2,272 ரன்களுடன் 2ம் இடத்தில் இருக்கிறார்.
2263 ரன்களுடன் ஷோயப் மாலிக் 3ம் இடத்திலும் 2167 ரன்களுடன் கிங் கோலி 4ம் இடத்திலும், 2140 ரன்களுடன் பிரண்டன் மெக்கல்லம் 5ம் இடத்திலும் உள்ளனர். 6ம் இடத்தில் 1936 ரன்களுடன் ஆப்கானிஸ்தானின் மொகமது ஷஜாத் உள்ளார்.
மேலும் ரோஹித் சர்மா 20 முறை 50+ ஸ்கோர்களை அடித்த விதத்திலும் முதலிடம் பிடித்துள்ளார். விராட் கோலி 19 அரைசத ஸ்கோர்களை எடுத்துள்ளார் அதனையும் இன்று முறியடித்தார் ரோஹித் சர்மா.
Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS
மேலும் டி20 சர்வதேசப் போட்டிகளில் 100 சிக்சர்கள் அடித்த 3வது வீரரானார் ரோஹித் சர்மா. இப்போது 102 சிக்சர்களில் இருக்கிறார் ரோஹித். கிறிஸ் கெய்ல், மார்டின் கப்தில் இருவரும் 103 சிக்சர்கள் அடித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்தவர்கள் பட்டியலில் 349 சிக்சர்களுடன் 4ம் இடத்தில் உள்ளார் ரோஹித். ஷாகித் அப்ரீடி, கிறிஸ் கெயில் இருவரும் 476 சிக்சர்களை அடித்துள்ளனர். பிரெண்டன் மெக்கல்லம் 398 சிக்சர்களையும் ஜெயசூரியா 352 சிக்சர்களையும் அடித்துள்ளனர்.