இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 14வது சீசன் ஏப்ரல் 9 முதல் கோலாகளமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 லீக் போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. தற்போது புள்ளி பட்டியலில் இரண்டு வெற்றிகளுடன் ஆர்சிபி அணி தான் முதலிடத்தில் இருக்கிறது.
இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடிய
4லீக் போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்களில் வெற்றி பெற்றது. இதில் கே எல் ராகுல் 91 ரன்களும், சஞ்சு சாம்சன் 119 ரன்களும் குவித்து இருக்கின்றனர். இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு விரலில் காயம் ஏற்பட்டததால் ஐபிஎல்லில் இருந்து முழுமையாக வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
ஒரு வாரம் கழித்து எடுக்கப்படும் எக்ஸ்ரேவில் தான் இதறக்கான முடிவு தெரியும். ராஜஸ்தான் அணி அடுத்தாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியை இன்று வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக யார் களமிறங்குவார் என்ற கேற்வி எழுந்துள்ளது. அவரது இடத்தில் விளையாட வாய்ப்புள்ள வீரர்கள் பற்றி பார்ப்போம்.
- அலெக்ஸ் ஹேல்ஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான இவர் சர்வதேச டி20 மற்றும் பிபிஎல் லீக் தொடரில் சிறந்த டி20 பேட்ஸ்மனாக இருக்கிறார். இவர் இதுவரை 60 டி20 போட்டிகளில் விளையாடி 1644 ரன்கள் குவித்து இருக்கிறார். ஐபிஎல் தொடரில் 2008 ஆண்டு அறிமுகமாகி 6 போட்டிகளில் விளையாடி மொத்தம் 146 ரன்கள் குவித்து இருக்கிறார். இதன்பிறகு இரண்டு வருடம் ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, இவர் மீது ராஜஸ்தான் அணி நம்பிக்கை வைத்து இந்த முறை வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- மார்டின் குப்தில்
நியூசிலாந்து வீரரான இவர் டி20 போட்டிகளில் நல்ல ரெக்கார்டுகளை வைத்து இருக்கிறார். இவர் ஐபிஎல்லில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 270 ரன்கள் குவித்து இருக்கிறார். பென் ஸடோக்ஸின் தொடக்க இடத்தை பூர்த்தி செய்ய இவர் சரியாக இருப்பார் என்பதால் இவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
- டெவன் கான்வே
மற்றொரு நியூசிலாந்து வீரரான இவர் ஆஸ்திரேலியா எதிராக கடைசியாக விளையாடிய தொடரில் அதிரடியாக விளையாடி பாராட்டு பெற்றார். ஆனால் இவரை ஐபிஎல் ஏலத்தில் எந்தொரு அணியும் எடுக்கவில்லை. தற்போது ஸ்டோக்ஸின் தொடக்க இடத்தில் இவர் களமிறங்கினால் தனது சிறப்பாக பேட்டிங் மூலம் அணிக்கு உதவியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.